10 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை.. மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை

டெல்டா மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், கொள்முதல் நிலையங்களில் உள்ள நெல் மூட்டைகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

Feb 28, 2025 - 11:09
Feb 28, 2025 - 11:40
 0
10 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை.. மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை
10 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை.. மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை

டெல்டா மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதையொட்டி தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று ஆலோசனை நடைபெற்றது.

 மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி காட்சி வாயிலாக நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், அமைச்சர்கள் துரைமுருகன், அர.சக்கரபாணி, தலைமை செயலாளர் முருகானந்தம், வருவாய் நிர்வாக ஆணையர் சாய்குமார், கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை செயலாளர் சத்யபிரதா சாகு, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை செயலாளர் விஜயராஜ்குமார் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

தமிழகத்தில் கடந்த இரண்டு தினங்களாக பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் கோவை, நீலகிரி, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, நெல்லை, குமரி உள்ளிட்ட 22 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கனமழை எச்சரிக்கை காரணமாக 12 மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள தமிழக அரசின் வருவாய் நிர்வாக ஆணையர் சாய்குமார் நேற்று மாவட்ட கலெக்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், ‘கனமழைக்கு முன்னதாகவே, தேவைப்படக்கூடிய அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும். ஒட்டுமொத்த மாவட்ட நிர்வாகத்தையும் பணியில் ஈடுபடுத்த வேண்டும்.

மக்களுக்கு தேவையான நிவாரண உதவிகளையும் முன்கூட்டியே தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று தலைமை செயலகத்தில், டெல்டா மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதையொட்டி கொள்முதல் நிலையங்களில் உள்ள நெல் மூட்டைகளை பாதுகாப்பது குறித்து தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர், மயிலாடுதுறை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களின் ஆட்சி தலைவர்களுடன் காணொலி காட்சி வாயிலாக ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் துரைமுருகன், அர.சக்கரபாணி, தலைமை செயலாளர் முருகானந்தம், வருவாய் நிர்வாக ஆணையர் சாய்குமார், நிதித்துறை செயலாளர் உதயச்சந்திரன், கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை செயலாளர் சத்யபிரதா சாகு, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை செயலாளர் விஜயராஜ்குமார், பேரிடர் மேலாண்மை துறை ஆணையர் சிஜி தாமஸ் வைத்யன், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சிறப்பு செயலாளர் கணேஷ் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இந்த ஆலோசனை கூட்டத்தின்போது, ‘டெல்டா மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், கொள்முதல் நிலையங்களில் உள்ள நெல் மூட்டைகள் மழை நீரால் நனையாமல் இருக்க உடனடியாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து, நெல் மூட்டைகளை பாதுகாக்க வேண்டும்’ என்று மாவட்ட கலெக்டர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow