"அரசியல் நடவடிக்கைக்கும், குடும்பத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை" - ஆதவ் அர்ஜூனா மனைவி டெய்சி அறிக்கை
ஆதவ் அர்ஜுனாவின் அரசியல் நடவடிக்கைக்கும், குடும்பத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என அவரது மனைவி டெய்சி தெரிவித்துள்ளார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியிலிருந்து விலகிய ஆதவ் அர்ஜூனா கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார். இதனையடுத்து, கடந்த புதன்கிழமை மாமல்லபுரத்தில் நடைபெற்ற தவெகவின் 2ம் ஆண்டு துவக்க விழாவில் ஆதவ் அர்ஜூனா பேசியது இணையத்தில் வைரலானது. இந்நிலையில், ஆதவ் அர்ஜுனாவின் அரசியல் நடவடிக்கைக்கும், குடும்பத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என அவரது மனைவி டெய்சி தெரிவித்துள்ளார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து விலகிய ஆதவ் அர்ஜுனா, நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் இணைந்திருக்கிறார். த.வெ.க. கட்சியில் ஆதவ் அர்ஜூனாவுக்கு தேர்தல் பிரச்சார மேலாண்மை பொது செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் த.வெ.க. இரண்டாம் ஆண்டு தொடக்க விழா ஆதவ் அர்ஜுனா மேற்பார்வையில் நடைபெற்றது. இவ்விழாவில் உரையாற்றிய ஆதவ் அர்ஜூனா, தி.மு.க. மற்றும் பா.ஜ.க. கட்சிகளை கடுமையாக விமர்சித்து பேசினார்.
இந்த நிலையில் தன் கணவரின் அரசியல் வாழ்க்கை மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையை தனித்தனியாக வைத்திருக்க முடிவு செய்துள்ளதாக ஆதவ் அர்ஜூனாவின் மனைவி டெய்சி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தானும் ஆதவ் அர்ஜுனாவும் எப்போதும் தங்கள் தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் தொழில் வாழ்க்கையை தனித்தனியாக வைத்திருப்போம் என்பதை அனைவருக்கும் தெரிவிக்க விரும்புவதாக கூறியுள்ளார்.
அனைத்து வேலை சார்ந்த விஷயங்கள், அரசியல் சார்ந்த முடிவுகள் சுயாதீனமாக எடுக்கப்படுவது தான் என்றும், அதற்கும் தங்கள் குடும்பத்திற்கும் எந்தவிதமான தொடர்பும் கிடையாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
தவறாக பகிரப்பட்டு வரும் தகவல்களையும் வதந்திகளையும் அகற்றுவதுதான் இந்த அறிவிப்பு கடிதத்தின் நோக்கம் என்றும், ஒருவருக்கொருவர் தனியுரிமை மற்றும் கருத்துக்களை மதிப்பதாகவும், யாரேனும் பொய்யான கருத்துகள் தெரிவித்தால் அதை எதிர்ப்போம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
What's Your Reaction?






