Gold Rate Update in Chennai : இந்தியாவில் ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த ஜூலை மாதத்தில் இருந்து ஏற்ற இறக்கமாகவே இருந்து வருகிறது. மத்திய பட்ஜெட்டில் சுங்க வரி குறைக்கப்பட்ட பிறகு தங்கத்தின் விலை குறைந்து வந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதத்திற்குப் பிறகு ஏற்ற இறக்கமாகவே இருந்து வந்தது. இந்த நிலையில் தங்கத்தின் விலை இன்று வெள்ளிக்கிழமை ஆசியச் சந்தையில் புதிய வரலாற்று உச்சத்தைத் தொட்டுள்ளது.
இதற்கு காரணம் அமெரிக்க டாலர் சரிவு மற்றும் அமெரிக்காவின் உற்பத்தியாளர் விலைக் குறியீடு (PPI) குறைவாக இருந்ததால், பெடரல் ரிசர்வ் (Fed) வட்டி விகிதத்தை அதிகமாகக் குறைக்கும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.அடுத்த சில நாட்களில் பெடரல் ரிசர்வ் தனது நாணய கொள்கை கூட்டம் துவங்க இருக்கும் வேளையில் நேற்றைய அமெரிக்க வர்த்தகத்தில் ஒரு அவுன்ஸ் தங்கம் விலை சுமார் 53 டாலர் வரையில் அதிகரித்துள்ளது. இது இந்தியா தங்க சந்தையில் எதிரொலித்துள்ளது.
அதன்படி கடந்த மாதம் இறுதியிலிருந்தே தங்கம் விலை மீண்டும் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. இதனால் நகைப்பிரியர்கள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். அதிலும் கடந்த 10 நாட்களில் தங்கம் விலை சரமாரியாக அதிகரித்துள்ளது. சென்ற 13ம் தேதி, ஒரே நாளில் சவரனுக்கு ரூ. 960 அதிகரித்து அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் தங்கம் விலை சவரனுக்கு ரூ. 600 உயர்ந்து உச்சத்தை அடைந்தது.
மேலும் படிக்க: "சிங்கம்" பட வில்லனாக வலம் வந்து தொழிலதிபர்களை மிரட்டியவர்... யார் இந்த சீசிங் ராஜா?
இந்நிலையில் தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ. 160 அதிகரித்துள்ளது. அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணாத் தங்கம் ரூ. 55, 840க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதே போல் கிராமுக்கு ரூ. 20 உயர்ந்து ரூ. 6,980க்கு விற்பனையாகி வருகிறது.
வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் ரூ. 98க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.