படித்த படிப்புக்கு வேலை இல்லை.. தம்பியின் வாழ்க்கைக்காக தன் உயிரை மாய்த்துக்கொண்ட அண்ணன்..!
படித்த படிப்புக்கு வேலை கிடைக்காததால் பொறியியல் பட்டதாரி தூக்கிட்டு தற்கொலை கொண்டுள்ளார். தன்னால் தனது தம்பியின் வாழ்க்கையில் பாதிப்பு ஏற்படக்கூடாது என விபரீத முடிவை எடுத்துள்ளது அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

தென்காசி மாவட்டம், தென்காசி நகரப் பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார். இவரது மகனான மணிபாரதி என்பவர் பி.இ.மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்துவிட்டு நீண்ட நாட்களாக வேலை தேடி வந்துள்ளார். அவ்வப்போது ஒரு சில நிறுவனங்களில் மணிபாரதி வேலைக்கு சேர்ந்த நிலையில், தனது படிப்பிற்கு ஏற்ற வேலை கிடைக்கவில்லை என்ற வருத்தத்திலும் இருந்துள்ளார்.
இந்நிலையில், மணிபாரதியிடம் அவரது தந்தை விஜயகுமார் 27 - வயது ஆகிறது. இதுவரை ஒரு நல்ல வேலைக்கு செல்லவில்லை, பிறகு எப்படி உனக்கு திருமணம் செய்ய முடியும், உனக்கு பின்பு உன் தம்பியும் இருக்கிறான். அவனுக்கும் திருமணம் செய்ய வேண்டும் என்ன செய்யப் போகிறாய் என விஜயகுமார் தனது மூத்த மகனான மணி பாரதியிடம் கேட்டுள்ளார்.
இதனை மனதில் வைத்துக்கொண்டு மாடிக்கு சென்ற மணிபாரதி "தான் இருந்தால், தான் தனது தம்பிக்கு திருமணம் செய்ய முடியாது, தான் இல்லையென்றால் அவன் ஒருவன் தானே அவனுக்கு நமது பெற்றோர் திருமணம் செய்து வைத்து விடுவார்கள்" என்று எண்ணிய மணிபாரதி வீட்டு மாடியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இதை பார்த்த அவரது பெற்றோர் இது தொடர்பாக தென்காசி காவல்துறைக்கு தகவல் கொடுத்த நிலையில், தகவல் அறிந்து விரைந்து வந்த தென்காசி காவல்துறையினர் மணிபாரதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
படித்த படிப்புக்கு வேலை கிடைக்காததாலும், தன்னால் தனது தம்பியும் பாதிக்கப்படுகிறானே என்ற மன வருத்தத்தில் இளைஞர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தென்காசியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து போலீசார் இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
What's Your Reaction?






