Breaking Bad பாணியில் மெத்தபெட்டமைன் விற்பனை -3 பேர் கைது

சென்னை ராயப்பேட்டையில் மெத்தபெட்டமைன் விற்பனையில் ஈடுபட்ட இரண்டு பொறியாளர்கள் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Jan 28, 2025 - 13:21
 0
Breaking Bad பாணியில் மெத்தபெட்டமைன் விற்பனை -3 பேர் கைது
Breaking Bad பாணியில் மெத்தபெட்டமைன் விற்பனை -3 பேர் கைது

சென்னை ராயப்பேட்டை சைவ முத்தையா தெரு பகுதியில் மெத்தபெட்டமைன் போதைப் பொருள் விற்பனை செய்ய படுவதாக வந்த தகவலை அடுத்து தனிப்படை போலீசார் அங்கு விசாரணை நடத்தினர். 

அப்போது அங்கு சந்தேகத்துக்கிடமாக நின்று இருந்த அசோக் நகர் பகுதியை சேர்ந்த ரித்தீஷ் ,ராயப்பேட்டை பகுதியை சேர்ந்த சக்தி வாசுதேவன் மற்றும் நடன கலைஞர்கள் வினேஷ் ஆகியோரிடம் விசாரணை நடத்தி சோதனை செய்தனர்.

அவர்களிடமிருந்து 10 சிரஞ்ஜ்,5 கிராம் மெத்தபெட்டமைன், 3 இருசக்கர வாகனம் மற்றும் 3 செல்போன்கள் பறிமுதல் செய்தனர். மேலும் அவர்களை கைது செய்து விசாரணையில் துரைப்பாக்கம் பகுதியில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணிபுரிந்து வருவதாகவும் அவர்களுடன் பணி புரியும் நுங்கம்பாக்கம் ஷெனாய் ரோடு பகுதியில் வசித்து வரும் அமித் என்பவர் கிரைண்டர் செயலி மூலம் மெத்தபெட்டமைன் விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. 

கைது செய்யப்பட்ட மூவரையும் நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் ஒப்படைத்து தலைமறைவாக உள்ள ஹமீத் என்பவரை திருவல்லிக்கேணி தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.

இந்நிலையில், சமீபகாலமாக சென்னையில் மெத்தபெட்டமைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்படும் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், போதைப்பொருள் அதிகரித்து வருவதை முற்றிலும் குறைக்கவேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow