மயிலாடுதுறையில் என்.ஐ.ஏ சோதனை நிறைவு.. முக்கிய ஆவணங்கள் பறிமுதல்..!
மயிலாடுதுறையில் காலை முதல் நடைபெற்று வந்த தேசிய புலனாய்வு முகமை சோதனை நிறைவடைந்த நிலையில், செல்போன்கள், லேப்டாப் மற்றும் ஆவணங்கள் கைப்பற்றப்பட்ட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த திருமுல்லைவாசல் பகுதியில் அதிகாலை முதல் 15 வீடுகளில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் பல்வேறு குழுக்களாக பிரிந்து சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சோதனையானது பழைய வழக்கு ஒன்றின் விசாரணையில் கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த சோதனையானது நடைபெற்று வருகிறது.
அதிகாலை முதல் தொடங்கிய சோதனை 5 மணிநேரத்தை கடந்து நிறைவடைந்தது. வீடுகளில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை முடிந்த நிலையில் லேப்டாப்,செல்போன்,பென்டிரைவ் உள்ளிட்ட ஆவணங்களை கைப்பற்றி எடுத்துச் சென்றனர். ஒரே நேரத்தில் தேசிய புலனாய்வு முகமை போலீசார் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தி வருவது அப்பகுதியில் மக்களிடையே அதிர்ச்சியையும் பரப்பரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
மேலும் சென்னையில் கைது செய்யப்பட்ட அல்பாஜிதை 2022 ஆண்டு டிசம்பர் மாதத்தில் திருமுல்லை வாசலில் உள்ள அவரது வீட்டில் தேசிய புலனாய்வு முகமை போலீசார் ஆறு மணி நேர விசாரணைக்கு பிறகு இரண்டு செல்போன்கள் சிம்கார்டுகள் சிடிகள் பென்டிரைவுகள் மற்றும் இவரது அறக்கட்டளை தொடர்பான ஆவணங்களை கைப்பற்றி எடுத்து சென்றனர். இவர் அந்த ஆண்டே ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்குத்துடன் இவருக்கு தொடர்பு இருப்பதாக கூறி சென்னையில் விசாரணை நடைபெற்ற நிலையில் அவர் வீட்டில் சோதனை நடைபெற்றது.
இந்த நிலையில் அல்பாஜித் திருமுல்லைவாசலை விட்டு சென்னையில் குடியேறிய நிலையில் அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்த திருமுல்லை வாசல் பகுதியை சேர்ந்த அமீர், நஃபீன்,பாசித், பைசல்,இம்ரான்,பைசர் அலி, மஹதீர் உள்ளிட்டவர்களின் வீடுகளில் தேசிய புலனாய்வு முகமை போலீசார் சோதனை செய்து செல்போன் லேப்டாப் மற்றும் முக்கிய ஆவணங்களை கைப்பற்றி சென்றுள்ளனர் மேலும் இந்த சோதனையை முழுவதுமாக வீடியோ பதிவு செய்து எடுத்து சென்றனர்.
What's Your Reaction?