டேட்டிங் ஆப் மூலம் பழக்கம்.. 4 சவரன் நகையை அபேஸ் செய்ததாக பெண் புலம்பல்
டேட்டிங் ஆப் மூலமாக பழக்கமான ஆண் நண்பரோடு சென்று 4 சவரன் நகையை இழந்து விட்டதாக விவாகரத்து பெற்ற பெண் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
விவகாரத்து பெற்ற பெண் என தெரிந்ததும் நட்பை துண்டித்து ஆண் நண்பர் நகையை திருப்பி கொடுத்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை சிட்லபாக்கம் பகுதியை சேர்ந்த 34 வயது பெண் சாப்ட்வேர் என்ஜினியராக உள்ளார். இவர் டேட்டிங் ஆப் ஆன பம்பிள் செயலி பயன்படுத்தி வந்தாக கூறப்படுகிறது. இந்த செயலி மூலம் போரூரைச் சேர்ந்த இளைஞர் பழக்கம் ஆகி உள்ளார். இருவரும் அந்த செயலி மூலம் அடிக்கடி சாட்டிங் செய்து வந்துள்ளனர்.
இதனால் அந்த இளைஞர் அந்த பெண்ணை சந்திக்க முடிவு செய்து நேரில் வரும்படி அழைத்ததாக கூறப்படுகிறது. கடந்த 2ஆம் தேதி அன்று இரவே கிண்டி கத்திபாரா அருகே இருவரும் சந்தித்தனர். பின் காரில் அண்ணாசாலையில் உள்ள புகாரில் ஹோட்டலில் உணவு அருந்திய போது, தனது கைப்பையில் இருந்த நான்கு சவரன் தங்க செயினை எடுத்து அந்த இளைஞர் கழுத்தில் அணிந்துள்ளார்.
தான் பின்னர் தருவதாகக் கூறிய அந்த இளைஞர் இதுவரை திருப்பி தரவில்லை. திருப்பித் தராமல் சென்றுவிட்டதால் அதிர்ச்சியடைந்த பெண் திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் 34 வயதான பெண் ஏற்கனவே திருமணமாகி விவகாரத்து ஆனவர் என்பதும், மாடலாக உள்ளதாகவும் கூறப்படுகிறது. டேட்டிங் ஆப் மூலமாக DLFஇல் உணவு கடை நடத்திவரும் பிரசாந்த் என்ற நபரின் அறிமுகம் கிடைத்துள்ளது.
இதனையடுத்து, இரவு ஊர் சுற்ற முடிவுசெய்து, இரவு 8 மணி அளவில் கிண்டியில் உள்ள உணவகத்தில் உணவு அருந்தி உள்ளனர். அதன்பின் இரவு காட்சி திரைப்படத்திற்கு சென்றுவிட்டு, பின் அதிகாலை வரை சுற்றிவிட்டு வீட்டிற்கு சென்றதும் தெரியவந்துள்ளது.
அவ்வாறு செல்லும்போது ஆண் நண்பர் செயினை எடுத்து சென்றதாக பெண் கூறவதாகவும், ஆனால் ஊர் சுற்றி முடித்த பின் அந்த பெண் தன்னை விட வயதில் மூத்தவர் என்பதும் ஏற்கனவே திருமணமாகி விவகாரத்து ஆனவர் என தெரியவந்ததால் செயினை திருப்பி கொடுத்து விட்டு சென்றதாக ஆண் நண்பர் தெரிவித்துள்ளாகவும் கூறப்படுகிறது.
இதனையடுத்து, இருதரப்பையும் இன்று விசாரணைக்கு வரச்சொல்லி இருப்பதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.
What's Your Reaction?