தமிழ்நாடு

பள்ளி கட்டிடங்களுக்கு தனியார் மூலம் தீயணைப்பு தடையில்லா சான்று..!

பள்ளி கட்டிடங்களுக்கு தனியார் மூலம் தீயணைப்பு தடையில்லா சான்று வழங்க வகை செய்யும் அரசாணை ரத்து செய்யக் கோரிய வழக்கில், தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பள்ளி கட்டிடங்களுக்கு தனியார் மூலம் தீயணைப்பு தடையில்லா சான்று..!
பள்ளி கட்டிடங்களுக்கு தனியார் மூலம் தீயணைப்பு தடையில்லா சான்று..!

தமிழ்நாட்டில் அடுக்குமாடி கட்டிடங்கள், கல்வி நிறுவனங்கள், வணிக வளாகங்கள், அரசுக்கட்டிடங்கள், மருத்துவமனை கட்டிடங்களுக்கு ஒப்புதல் பெறும் முன் தீயணையப்பு துறையின் தடையில்லா சான்று பெறுவது கட்டியாமாக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கட்டிடங்கள் அனுமதி வழங்கும் நடைமுறைகளை எளிமைப்படுத்த கடந்த 2024ம் ஆண்டு நவம்பர் 21 ம் தேதி தமிழக அரசு அரசாணை ஒன்றை வெளியிட்டது.

அதில், கட்டிடங்களுக்கான திட்ட அனுமதி, தீயணையணைப்பு துறை தடையில்லா  சான்று வழங்குவதற்கான நடைமுறைகளை தனியார் வசம் ஒப்படைக்கப்படும் என்றும் அடிக்குமாடி குடியிருப்புகள் தீயணைப்பு சான்றை தாங்களாகவே தங்களுக்கு வழங்கி கொள்ளலாம் எனவும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த அரசானையை ரத்து செய்யக் கோரி அகில இந்திய தனியார் பள்ளிகள் சட்ட பாதுகாப்பு சங்கத்தின் செயலாளர் நீரஜ் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

அந்த மனுவில், தீயணைப்பு துறை வழங்கி வரும் தடையில்லா சான்றை தனியார் மூலம் வழங்கலாம் என்பது சட்டவிரோதமானது என்றும் தீயணைப்பு துறை தான் அவ்வப்போது ஆய்வு செய்து தடையில்லா சான்று வழங்க வேண்டும் எனவும் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

மேலும் தனியார் மூலம் வழங்கப்படும் தீயணைப்பு தடையில்லா சான்று புதிய நடைமுறைகளின் படி 3 ஆண்டுகளுக்கு செல்லும் என்பது மிகவும் ஆபத்தானது எனவும் கும்பகோணம் பள்ளி தீ விபத்து சம்பவத்தை தொடர்ந்து உச்ச நீதிமன்றம் பள்ளிக் கட்டிடங்களை தீவிபத்துக்கள் நிகழா வண்ணம் பாதுகாப்பாக இருக்கும் வகையில் அமைக்க வேண்டும் என உத்தரவிட்டிருப்பதாக மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மனு நீதிபதி பரதசக்ரவர்த்தி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், அரசு தலைமை வழக்கறிஞர் பி.எஸ் ராமன் ஆஜராகி, வழக்கு தொடர்பாக பதில் மனுத்தாக்கல் செய்ய கால அவகாசம் வேண்டும் என தெரிவித்தார்.

இதனை ஏற்ற நீதிபதி, வழக்கு தொடர்பாக தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை ஏப்ரல் 9 ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.