வெயில் காலத்தில் ஏன் தர்பூசணி சாப்பிட சொல்றாங்க தெரியுமா?

பொதுவாக ஏப்ரல், மே மாதங்களில் சூரியனின் தாக்கம் அதிகளவில் காணப்படும். ஆனால், கடந்த சில வருடங்களாக சூரியனின் தாக்கம் மார்ச் மாதத்திலேயே அதிகரிக்கத் தொடங்குகிறது. இந்நிலையில், அடுத்தடுத்த மாதங்களில் பொது இடங்களுக்கு செல்லும் போது உடல் சூட்டைத்தணிக்க நிறைய தண்ணீர், பழங்கள் எடுத்துக்கொள்வது அவசியமாகிறது. 

Mar 26, 2025 - 17:11
Mar 26, 2025 - 17:25
 0
வெயில் காலத்தில் ஏன் தர்பூசணி  சாப்பிட சொல்றாங்க தெரியுமா?
தர்பூசணி

அனைவருக்கும் எளிதில் கிடைக்கக்கூடிய தர்பூசணியை தண்ணீர் காய் என்று அழைக்கிறோம். இரும்புச் சத்து, புரதச்சத்து போன்ற ஏராளமான சத்துகள் நிறைந்துள்ள தர்பூசணியை, நம் அன்றாட வாழ்வில் உணவாக எடுத்துக் கொள்வதன் மூலம் ஏற்படும் நன்மைகள் குறித்து காணலாம். 

வெயில் காலங்களில் அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய ஒன்று தர்பூசணி. பல்வேறு ஊட்டச்சத்துக்களை வழங்குவதில் முக்கிய பங்காற்றுகிறது. நீரிழிவு நோய் முதல் உடலில் தேவையற்ற கழிவுகளை வெளியேற்றுவதிலும் முக்கியப்பங்காற்றுகிறது. 

உடல் சூடு தணியும்

மனித உடலில் ஏற்படும் வெப்பத்தை தணித்து உடலை குளிர்ச்சியாக்க தர்பூசணி முக்கிய பங்காற்றுகிறது. கோடைக் காலங்களில் சாலையோர கடைகள் மற்றும் பழச்சாறு கடைகளில் இன்றியமையாத பொருளாக விளங்குவது தர்பூசணி. குறைந்த விலையில் இயற்கையாக விளையும் பொருள் என்பதால் அனைத்து தரப்பு மக்களும் சாப்பிடக்கூடிய பழமாக எளிதில் கிடைக்கிறது.  

நீர்ச்சத்து அதிகரிப்பு

கோடைக் காலங்களில் மட்டுமே கிடைக்கக்கூடிய பழம் என்பதால், வரத்து அதிகமாக காணப்படும். இது போன்ற நாட்களில் விலை குறைவாக கிடைக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தர்பூசணி, உடலில் நீர்ச்சத்து அதிகரிக்கவும் உதவுகிறது. 

தர்பூசணியில் வைட்டமின் சி, பி அதிகமாக உள்ளதால் இரும்புச் சத்து, புரதச்சத்து போன்ற உடலுக்கு தேவையான அனைத்து சத்துகளும் கிடைக்கிறது. உடல் சூட்டை தணிக்கவும் உடல் எடை குறைவதிலும் முக்கிய பங்காற்றுகிறது. பெரும்பாலும் பெண்களுக்கு ஏற்படும் கர்ப்பப்பை பிரச்சனைகள் மற்றும் மார்பக புற்று நோய்கள் வராமல் தடுப்பதற்கு சிறந்த நிவாரணியாக உதவுகிறது. அழற்சி நோய், நரம்பு பிரச்சனைகள், பற்கள் பிரச்சனை, ஆஸ்துமா, எடைக் குறைவு, சிறுநீரக பிரச்சனைகள், கண் பிரச்சனைகள், செரிமான பிரச்சனைகள், மலச்சிக்கல் போன்ற அனைத்து நோய்களுக்கும் சிறந்த தீர்வாக உள்ளது. 

சருமப் பிரச்சினைகள்

தர்பூசணியின் பழம் மட்டுமல்லாது அதன் தோல், விதை போன்ற அனைத்தும் பயனுள்ளதாகவே அமைகிறது. தர்பூசணி விதைகளை பொடியாக்கி முகத்தில் போடுவதன் மூலம் சருமம் மிருதுவானதாக இருக்கும். சருமத்தில் உள்ள பருக்கள், தழும்புகள் போன்ற பிரச்சனைகளுக்கு தர்பூசணி விதைகள் பயன்படுகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow