சுட்டெரிக்கும் வெயில்.. வெப்பத்தை குறைக்க தண்ணீரை ஸ்ப்ரே செய்யும் நவீன மெஷின்..!
திருப்பூரில் வெப்பத்தை தணிக்கும் வகையில், பேக்கரியில் நவீன தொழில்நுட்பத்தின் மூலம் தண்ணீரை ஸ்ப்ரே செய்யும் கருவி பொருத்தப்பட்டிருப்பது மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.

திருப்பூரில் வெயிலின் தாக்கத்தை குறைக்கும் வகையில், திருப்பூர் பல்லடம் சாலை தென்னம்பாளையத்தில் அமைந்துள்ள பேக்கரியில் தண்ணீரை ஸ்ப்ரே செய்யும் கருவி பொருத்தப்பட்டுள்ளது. இதனால் கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
கடந்த சில தினங்களாக தமிழகம் முழுவதும் அனைத்து பகுதிகளிலும் வெயில் சுட்டெரித்து வருகிறது. வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், பொதுமக்கள் இளநீர், மோர், தர்பூசணி உள்ளிட்ட உணவுப் பொருட்களை தேடித் தேடி சாப்பிட்டு தங்களது உடல் சூட்டை தணித்து வருகின்றனர். அந்த வகையில், திருப்பூரில் கடந்த சில நாட்களாக வெயில் 110 டிகிரி பாரன்ஹீட்டுக்கு மேலாக அதிகரித்து வருகிறது. மார்ச், ஏப்ரல் மாதங்களிலேயே வெயிலின் தாக்கம் அதிக அளவில் காணப்படுவதால், சரும பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படுகிறது.
இதனால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும், வெயிலின் பிடியில் இருந்து தப்ப பொதுமக்கள் ஏராளமான வழிகளைக் கையாண்டு வருகின்றனர். இத்தகைய செயல் பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் இதேபோல் அனைத்து பகுதிகளிலும் சிறப்பான ஏற்பாடுகள் செய்தால் வெயிலின் தாக்கத்தை எளிமையாக எதிர்கொள்ள முடியும் என பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
What's Your Reaction?






