இலங்கைக்கு கஞ்சா கடத்தல்.. தஞ்சாவூரில் 128 கிலோ கஞ்சா பறிமுதல்..!
படகு மூலம் இலங்கைக்கு கடத்த இருந்த 20 லட்சம் மதிப்புள்ள 128 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் நான்கு பேர் கைது செய்து, மேலும் இருவரை தேடி வருகின்றனர்.
கேரளாவில் இருந்து தஞ்சாவூர் மாவட்ட கடல் வழியாக இலங்கைக்கு கஞ்சா கடத்தப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் பல்வேறு இடங்களில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உத்தரவின் படி குற்ற செயல்களை தடுக்கும் பொருட்டு அனைத்து உட்கோட்ட காவல் பகுதிகளிலும் சுழற்சி அடிப்படையில் தனிப்படைகள் அமைத்து தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே தென்னமநாடு பகுதியில் காவல்துறையினர் வாகன சோதனை ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த காவல்துறையினர் தடுத்து நிறுத்தியும் நிறுத்தாமல் வேகமாக சென்றது. இதனையடுத்து காவல்துறையினர் அந்த காரை துரத்தி சென்றனர். சுமார் பத்து கிலோமீட்டர் தூரம் துரத்தி சென்று பாப்பாநாடு அருகே காவல்துறையினர் அந்த காரை மடக்கி பிடித்தனர்.
காரில் இருந்த நான்கு பேரையும் காவல்துறையினர் தப்பி ஓடாமல் பிடித்தனர். இதனையடுத்து காரை சோதனை செய்த போது பொட்டலங்களாக கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
சுமார் 20 லட்சம் மதிப்புள்ள 128 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த காவல்துறையினர் அபிலாஷ், சதீஷ்குமார், லெட்சுமணன், நித்திஷ் ஆகிய நான்கு பேரை கைது செய்தனர். மேலும் இந்த கடத்தல் தொடர்பாக இருவரை தேடி வருகின்றனர்.
திருச்சி, ராம்ஜி நகரை கார்த்திக் மற்றும் அருண்குமார், திருவனந்தபுரத்தை சேர்ந்த அபிலாஷ், திருச்சி திருவெறும்பூர் பகுதியை சேர்ந்த திருச்சி திருவெறும்பூர் காந்திநகர் பகுதியை சதீஷ்குமார், தஞ்சாவூர் ஓல்ட் ஹவுஸ் யூனிட் பகுதியை சேர்ந்த நிதிஷ் உள்ளிட்ட ஆறு பேர் இந்த கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளது விசாரணையில் தெரியவந்தது.
What's Your Reaction?