1,556 கிலோ கெட்டுப்போன இறைச்சி பறிமுதல்.. சென்னையில் பரபரப்பு
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ஆயிரத்து 556 கிலோ கெட்டுப்போன இறைச்சிகளை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கைப்பற்றியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ஆயிரத்து 556 கிலோ கெட்டுப்போன இறைச்சிகளை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கைப்பற்றியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. வட மாநிலத்திலிருந்து சட்ட விரோதமாக ரயில் மூலம் சென்னைக்கு இறைச்சி கொண்டு வரப்படுவது உணவகங்களில் விற்பனை செய்யப்படுகிறது. இந்தநிலையில் டெல்லியில் இருந்து ரயில் மூலமாக உரிய சான்றிதழ் இல்லாமல் கொண்டு வரப்பட்ட கெட்டுப்போன இறைச்சிகளை உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். கடந்த மாதம் எழும்பூர் ரயில் நிலையத்திலும் 12 லட்சம் மதிப்புள்ள ஒன்றரை டன் கெட்டுப்போன இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
What's Your Reaction?