டங்ஸ்டன் விவகாரம்.. திமுக, அதிமுக இருவருமே நாடக காரர்கள் தான் - சீமான் அதிரடி
டங்ஸ்டன் சுரங்கம் ஏலம் விவகாரத்தில் திமுக, அதிமுக இரண்டு கட்சிகளுமே நாடக காரர்கள் தான் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
சென்னை, வளசரவாக்கத்தில் உள்ள நாம் தமிழர் கட்சி தலைமை அலுவலகத்தில் வேலு நாச்சியார் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வேலு நாச்சியார் திருவுருப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “டங்ஸ்டன் சுரங்கம் குறித்து சட்டசபையில் தி.மு.க., அ.தி.மு.க., நாடகம் ஆடியது. டங்ஸ்டன் ஏலத்திற்கு எதிர்ப்பே தெரிவிக்காமல் சட்டசபையில் தீர்மானம் போட்டு நாடகம். மத்திய அரசுக்கு எதிர்ப்பே கூறாமல் இருந்த தி.மு.க., அரசு சட்டசபையில் ஏதற்கு தீர்மானம் போட்டது? விமான நிலையம், அனல் மின் நிலைய விரிவாக்க திட்டங்களை என்னை மீறி கொண்டு வர முடியாது என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.
டங்ஸ்டன் டெண்டர் விடப்பட்ட போது தி.மு.க., அரசு மறுப்பு தெரிவிக்கவில்லை என மத்திய அரசு கூறியுள்ளது. தேர்தல் அரசியலுக்காகவே டங்ஸ்டனுக்கு எதிராக தீர்மானம் போட்டனர். தரிசு நிலம் போல் தமிழகத்தை மாற்றிவிட்டார்கள். என் நிலத்தில் ஒரு பிடி மண்னை அன்னியன் தொடக் கூடாது என்பதற்காக போராடி இறந்தவன் இனத்தில் இருந்து நாங்கள் வந்தவர்கள். எனக்கு என் நிலமும், வளமும், என் மண்ணும் என் மக்களின் நலனும் தான் முக்கியம்.
கட்சி, தேர்தல் அரசியல், ஓட்டு அரசியல் எல்லாம் எனக்கு நான்காம் பட்சம். வேண்மென்றால் தேர்தலில் என்றால் நிற்போம். இல்லை என்றால் போய் விடுவோம். ஓட்டை வாங்கி நான் என்ன பண்ண போகிறேன். அதிகாரத்திற்கு வந்து என்ன பண்ண போகிறேன். எனது நிலத்தை எல்லாம் தோண்டி எடுத்துவிட்டு போகட்டும் என்று சொல்வதற்கா? நாங்கள் பல வெற்று தீர்மானத்தை பார்த்தவர்கள். அதனால் தான் போய் போராடினோம். இப்பொழுதும் சொல்கிறேன் மக்களுக்காக போராடுவேன்” என்று தெரிவித்தார்.
What's Your Reaction?