ஃபெஞ்சல் புயல் எதிரொலி... வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய இன்று விழுப்புரம் செல்கிறார் முதலமைச்சர்..!

ஃபெஞ்சல் புயலினால் ஏற்பட்ட கடுமையாக வெள்ள பாதிக்களை ஆய்வு செய்ய இன்று விழுப்புரம் சென்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்ய உள்ளார்.

Dec 2, 2024 - 07:30
 0
ஃபெஞ்சல் புயல் எதிரொலி... வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய இன்று விழுப்புரம் செல்கிறார் முதலமைச்சர்..!
வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய இன்று விழுப்புரம் செல்கிறார் முதலமைச்சர்

ஃபெஞ்சல் புயல் காரணமாக பெய்த கனமழையினால் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்ட விழுப்புரம் மாவட்டத்தில்  இன்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்ய உள்ளார்.

வங்கக் கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தன்னுடைய தடத்தை பதித்து சென்றுள்ளது. ஃபெஞ்சல் புயல் கரையை கடந்த நிலையிலும், விழுப்புரம், கடலூர், அரியலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. 

விழுப்புரம் மாவட்டம் முழுவதும் கனமழை கொட்டித் தீர்த்தது. தமிழகத்திலே அதிகப்படியாக விழுப்புரம் மாவட்டம் மயிலத்தில் 51 செ.மீ அளவில் மழை பதிவானதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. விழுப்புரம் மாவட்டம் முழுக்க மயிலம், கூட்டேரிப்பட்டு, ரெட்டணை, பெரமண்டூர் போன்ற பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது. விழுப்புரம் மாவட்டத்தில் சராசரியாக 49.29 செ.மீ மழை பெய்துள்ளது. 

புயல் காரணமாக தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் மிகவும் கடுமையான மழை பொழிவு காணப்பட்ட நிலையில், வெள்ள பாதிப்பு ஏற்பட்ட விழுப்புரம் மாவட்டத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்ய உள்ளார்.

இன்று காலை சென்னையில் இருந்து விழுப்புரம் செல்லும் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின்,  கனமழையினால் பாதிக்கப்பட்ட பல்வேறு பகுதிகளை பார்வையிடுகிறார். வெள்ள பாதிப்பை ஆய்வு செய்த பிறகு , மரக்காணம், விக்கிரவாண்டி உள்ளிட்ட பகுதிகளில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்க உள்ளார்.  தொடர்ந்து, விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மழை பாதிப்புகள் தொடர்பாக ஆய்வு மேற்கொள்ள உள்ளார்.

ஏற்கனவே கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்து மக்களுக்கு தேவையான உதவிகளை செய்ய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் பொன்முடி, செந்தில் பாலாஜி, எஸ்.எஸ்.சிவசங்கர் மற்றும் துறை சார்ந்த உயர் அதிகாரிகள் அனைவரும் சம்பந்தப்பட்ட மாவட்டங்களுக்கு சென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வெள்ள நிவாரண முகாம்களில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். மாவட்டம் முழுவதும் மீட்பு பணிகளில், தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் உள்ளிட்ட பலரும் இரவு பகல் பாராமல் தொடர்ச்சியாக மழைக்கும் நடுவில் நடைபெற்று வருகிறது. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow