ஆசிரியர்கள் மீது தமிழக அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் சரியானதே - கிருஷ்ணசாமி கருத்து

பள்ளிகளில் பாலியல் தொடர்பான விவகாரங்களில் ஆசிரியர்கள் மீது தமிழக அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் சரியானதே என்றும் அதனை நான் வரவேற்கிறேன் என்று புதிய தமிழகம் கட்சியின் நிறுவனத்தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார். 

Mar 12, 2025 - 20:58
 0
ஆசிரியர்கள் மீது தமிழக அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் சரியானதே -   கிருஷ்ணசாமி  கருத்து
ஆசிரியர்கள் மீது தமிழக அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் சரியானதே - கிருஷ்ணசாமி கருத்து

வேலூரில் இன்று செய்தியாளரிடம் பேசிய கிருஷ்ணசாமி, தமிழகத்தில் மதுபான ஆலைகளில்  ஒரு லட்சம் கோடி ஊழல் நடந்திருப்பதாக கடந்த 2023 ஆம் ஆண்டு புதிய தமிழகம் கட்சி சார்பில் குற்றச்சாட்டு வைத்தேன். தற்போது ஆயிரம் கோடி ஊழல் நடந்து இருப்பதாக அரசியல் கட்சியினர் கூறி வருகின்றனர். ஒரு லட்சம் கோடிக்கு மேல் அதிகமாகவே இருக்கும்.

அமலாக்கத்துறை இந்த விவகாரத்தில் சரியான முறையில் விசாரணை செய்து அதனை மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும். தமிழகத்தில் மணல் கொள்ளை மதுபான ஊழல் ஆகியவற்றில் அதிகளவில் ஊழல் நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக அமலாக்கத்துறையினர்
விசாரணை செய்து கிடப்பில் போட்டு விடுகின்றனர். எனவே அமலாக்கத்துறை விசாரணையில் என்னென்ன கைப்பற்றப்பட்டுள்ளது என்பதை பொதுமக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்று கூறினார். 

Read More: மத்திய தொழில் பாதுகாப்பு படை 56-வது ஆண்டு விழா.. மோப்ப நாய்களின் ஒத்திகை நிகழ்ச்சி..!

மணல் மற்றும் டாஸ்மாக் ஆகியவற்றில் நடைபெறும் ஊழல்களை குறித்து அமலாக்க துறையினர் முழுமையாக விசாரணை செய்து உண்மையை வெளிக் கொண்டு வர வேண்டும் இது தொடர்பாக அமலாக்கத்துறை வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். 

அமலாக்கத்துறை விசாரணை எல்லாம் அச்சுறுத்த வே நடத்தப்படுகிறது என அரசியல் கட்சியினர் கூறுகிறார்களே என செய்தியாளர்கள் கேட்டதற்கு, இந்த விவகாரங்களில் மத்திய அரசு உள்நோக்கம் இல்லை என்றால் அமலாக்கத்துறையின் முழு விசாரணைகளையும் என்னென்ன கைப்பற்றப்பட்டுள்ளது என்பதையும் பொதுமக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.

தமிழக அரசு மும்மொழிக் கொள்கையில் கபட நாடகமாடுகிறது. வரட்டு கௌரவத்தால் மும் மொழியை திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் எதிர்கிறது. தேசிய கல்விக் கொள்கையில் இந்தியை கட்டாயம் கற்க வேண்டும் என்று  தெரிவிக்கவில்லை.

மொழிகளை கற்பதில் தீர்மானிப்பது பெற்றோர்களும் குழந்தைகளும் தான் அரசியல்வாதிகள் அல்ல என்பதை புரிந்து கொள்ள வேண்டும். பிற மொழிகளை படிக்காத காரணத்தினால் தான் நீட் யூபிஎஸ் உள்ளிட்ட பல்வேறு தேர்வுகளில் மாணவர்களால் அதிக அளவில் தேர்ச்சி பெற முடியவில்லை. மாறிவரும் காலத்திற்கு ஏற்ப பல்வேறு இடங்களுக்கு சென்று வாழ்வாதாரத்தை மேம்படுத்திக் கொள்ள பல மொழிகளையும் கற்பதில் எந்த தவறும் இல்லை. அதனால் தான் தேசிய கல்விக் கொள்கை அவசியமாகிறது.

Read More: அரசு முறை பயணமாக மொரீஷியஸ் சென்ற பிரதமர் மோடி.. முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து..!

எனவே மும் மொழி கல்விக் கொள்கை விவகாரத்தில் திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் மறுபரிசீலனை செய்ய வேண்டும்.  பள்ளிகளில் பாலியல் தொடர்பான விவகாரங்களில் ஆசிரியர்கள் மீது தமிழக அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் சரியானதே என்றும் அதனை நான் வரவேற்கிறேன் என்றும் கிருஷ்ணசாமி கூறினார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow