மத்திய தொழில் பாதுகாப்பு படை 56-வது ஆண்டு விழா.. மோப்ப நாய்களின் ஒத்திகை நிகழ்ச்சி..!

சென்னை விமான நிலைய மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் 56-வது ஆண்டு விழாவை முன்னிட்டு விமான நிலையத்தில் பாதுகாப்பு பிரிவில் பணியில் ஈடுபடும் மோப்ப நாய்களின் ஒத்திகையில் ஈடுபட்டனர். 

Mar 12, 2025 - 17:31
 0
மத்திய தொழில் பாதுகாப்பு படை 56-வது ஆண்டு விழா.. மோப்ப நாய்களின் ஒத்திகை நிகழ்ச்சி..!
மத்திய தொழில் பாதுகாப்பு படை 56-வது ஆண்டு விழா.. மோப்ப நாய்களின் ஒத்திகை நிகழ்ச்சி..!

மத்திய தொழிற் பாதுகாப்பு படை 56-வது ஆண்டு தொடக்க விழாவை கடந்த 7ஆம் தேதி நாடு முழுவதும், மத்தியில் தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் வெகு விமர்சையாக கொண்டாடினர். இதன் ஒரு பகுதியாக சென்னை அருகே உள்ள அரக்கோணம் மத்திய தொழில் பாதுகாப்பு படை பயிற்சி மையத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா மத்திய தொழில் பாதுகாப்பு படையின் வளமான பாரதம் பாதுகாப்பான கடற்கரை என்ற தலைப்பில் சைக்கிள் பேரணி தொடங்கி வைத்தார்.

Read More: அரசு முறை பயணமாக மொரீஷியஸ் சென்ற பிரதமர் மோடி.. முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து..!

இதனை தொடர்ந்து, ஒரு வாரமாக மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் தீவிரவாத தடுப்பு ஒத்திகை, ஜிம்னாஸ்டிக், விமான நிலையங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் மோப்பனாய் கண்காட்சிகள் நடத்தி வருகின்றனர்.

அந்த வகையில் சென்னை பழவந்தாங்கல் பகுதியில் உள்ள மத்திய தொழில் பாதுகாப்பு படை தலைமை அலுவலகத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படையின் 56-வது ஆண்டு விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. அதில் சென்னை விமான நிலைய பாதுகாப்பு பிரிவில் ஈடுபடுத்தப்படும் 9, குழுவைச் சேர்ந்த மோப்ப நாய்களை வைத்து பல்வேறு ஒத்திகை நிகழ்ச்சிகளை நடத்தினர்

இந்த ஒத்திகை நிகழ்ச்சியில் வெடி பொருட்களை கண்டுபிடிப்பது விமான நிலையங்களில் கடத்தப்பட்டு வரும் போதைப் பொருட்களை கண்டுபிடிப்பது பேரிடர் காலத்தில் எவ்வாறு விரைந்து செயல்படுவது போன்ற பல்வேறு ஒத்திகை நிகழ்ச்சிகளை சென்னை விமான நிலைய பாதுகாப்பு பிரிவில் ஈடுபடும் கே 9 எனப்படும் குழுவின் மோப்ப நாய்கள் தத்ரூபமாக செய்து காட்டின.

Read More: இதய அறுவை சிகிச்சையில் சாதனை - இம்பெல்லா பம்ப் பொருத்தம்

பின்னர் மோப்பநாய் கண்டுபிடிக்கும் வெடி பொருட்களை மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் பத்திரமாக மீட்டு அதனை தனியே கொண்டு சென்று பாதுகாப்பாக வெடிக்க வைப்பதையும் செய்து காட்டினர்.  இந்த நிகழ்ச்சியில் மத்திய தொழில் பாதுகாப்பு படை டிஐஜி அருண் சிங், உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow