இதய அறுவை சிகிச்சையில் சாதனை - இம்பெல்லா பம்ப் பொருத்தம்

தஞ்சை மீனாட்சி மருத்துவமனை இதயவியல் துறை மருத்துவர்கள் இதயத்தில் இருந்து ரத்தத்தை பம்ப் செய்து உடலின் பிற உறுப்புகளுக்கு அனுப்புவதற்கு தற்காலிகமாக இம்பெல்லா என்ற பொறியியல் சார்ந்த இதய பம்பை பயன்படுத்தி 80 வயது முதியவருக்கு இதய அறுவை சிகிச்சை செய்து சாதனைப் படைத்துள்ளனர்.

Mar 12, 2025 - 16:39
Mar 12, 2025 - 18:20
 0
இதய அறுவை சிகிச்சையில் சாதனை - இம்பெல்லா பம்ப் பொருத்தம்
இதய அறுவை சிகிச்சையில் சாதனை - இம்பெல்லா பம்ப் பொருத்தம்

இதயம் மிகவும் பாதிக்கப்பட்டு அடைப்புகள் ஏற்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சைக்கு வந்த 80 வயது முதியவருக்கு தஞ்சை மீனாட்சி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை இதயவியல் துறை மருத்துவர்கள் இம்பெல்லா என்ற கருவியை பயன்படுத்தி அறுவை சிகிச்சை மேற்கொண்ட நிலையில், அதில் வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளனர். 

இதுகுறித்து இதயவியல் மருத்துவத்துறை தலைவர் கேசவமூர்த்தி கூறியதாவது, தமணியில் கடுமையான அடைப்புகள் அல்லது அளவுக்கு அதிகமாக கால்சியம் படிமங்கள் போன்ற காரணங்களால் நோயாளியின் இதயம் மிகவும் பலவீனமடைந்து இதயம் செயல்பாட்டை நிறுத்தி விடும். 

இதனால் உயிரிழப்பு போன்ற கடுமையான விளைவுகள் ஏற்படலாம் சிக்கலான ஆஞ்சியோ பிளாஸ்டிக் செயல்முறைகள் கூட இதயத்தின் மீது அதிக அழுத்தம் ஏற்படுத்தப்படும் எனவே, இது போன்ற நேரங்களில் இம்பெல்லா என்ற பொறியியல் பம்பை பயன்படுத்தும் போது இதயத்தின் செயல்பாட்டை தற்காலிகமாக இம்பெல்லா எடுத்துக் கொள்கிறது.

இதனால் அறுவை சிகிச்சையின் போது உயிரிழப்பு ஏற்படும் வாய்ப்பை பெருமளவு குறைக்க முடிகிறது. உடலின் பிற உறுப்புகளுக்கு ரத்தத்தை தற்காலிகமாக அனுப்புவதற்கு இந்த இன்பெல்லா பெரிதும் பயன்படுகிறது

Read More:  IQAir-ன் உலக காற்று தர அறிக்கை.. இந்தியாவிற்கு 5-வது இடம்...!

இதயத்தில் இருந்து ரத்தத்தை இம்பெல்லா பம்ப் செய்வதன் மூலம் சிக்கலான ஆஞ்சியோ பிளாஸ்டிக்ஸ் செய்முறையின் போது பாதுகாப்பு மேம்படுத்துகிறது. இதன் மூலம் இதயம் ஓய்வெடுக்கவும் இயல்பு நிலைக்கு திரும்பவும் உதவுகிறது. மிக முக்கியமாக குருதி இயக்க ஸ்திர தன்மையை இந்த இயங்குமுறை வழங்குகிறது.

நிலையாக ரத்தம் இதயத்திற்கு செல்வதால் அனைத்து உறுப்புகளும் இயல்பான இயக்கங்களுக்கு ஆதரவாக இதயமும் ரத்த நாளங்களும் பராமரிக்கும் நிலையிலேயே இருக்கிறது என்றார்.

Read More: ஒரு குப்பை தொட்டி கூட இல்லையா..? அரசு அதிகாரிகள் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!

இம்பெல்லா பம்பின் விலை 25 லட்சம் ரூபாய் எனவும் அமெரிக்காவிலிருந்து வரவழைக்கப்பட்டு 80 வயது முதியவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாகவும், ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக் கூடியது எனவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow