அரசு முறை பயணமாக மொரீஷியஸ் சென்ற பிரதமர் மோடி.. முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து..!
இந்தியாவும் மொரீஷியஸூம், இந்தியப் பெருங்கடலால் மட்டுமல்ல, கலாசாரத்திலும் ஒற்றுமையாக உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

மொரீஷியச் நாட்டின் 57வது தேசிய தின கொண்டாட்டத்தில் பங்கேற்க அந்நாட்டு பிரதமர் நவீன்சந்திர ராம்கூலம் இந்திய பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்திருந்தார். அதன் பேரில் 2 நாட்கள் அரசுமுறை பயணமாக பிரதமர் மோடி இன்று காலை மொரீஷியஸ் சென்றடைந்தார். அவருக்கு அந்நாட்டு பிரதமர் நவீன்சந்திர ராம்கூலம் மாலை அணிவித்து வரவேற்றார். மேலும் தூதரக அதிகாரிகளும், இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்களும் உற்சாக வரவேற்பு அளித்தனர்..
Read More: ஒரு குப்பை தொட்டி கூட இல்லையா..? அரசு அதிகாரிகள் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!
கிழக்கு ஆப்ரிக்க நாடான மொரீஷியஸ் நாட்டின் தேசிய தினம் மற்றும் சுதந்திர தினத்தில் சிறப்பு விருந்தினராக பங்கேற்பதற்காக, இரண்டு நாள் அரசு முறை பயணமாக பிரதமர் மோடி சென்றுள்ளார். பின்னர், மொரீஷியஸ் பிரதமர் நவின் ராமகூலம் மற்றும் பிரதமர் மோடி ஆகியோர் சந்தித்து பேசினர். அப்போது, இருநாட்டு தலைவர்கள் முன்னிலையில் பல்வேறு முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.
அதனைத்தொடர்ந்து மொரீஷியஸின் தேசிய தின விழாவில் பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். அப்போது கொட்டும் மழையிலும் ராணுவ அணிவகுப்பு கோலாகலமாக நடைபெற்றது.
பின்னர், நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, மொரீஷியஸின் பொருளாதாரத்தின் பாதுகாப்பைப் பராமரிப்பதில் தாங்கள் ஒத்துழைக்க உறுதிபூண்டுள்ளதாக தெரிவித்தார். இந்தியாவும் மொரீஷியஸூம் இந்தியப் பெருங்கடலால் மட்டுமல்ல, கலாசாரத்திலும் ஒற்றுமையாக உள்ளதாகவும், சுகாதாரம், விண்வெளி அல்லது பாதுகாப்பு எதுவாக இருந்தாலும், ஒருவருக்கொருவர் முன்னேறி வருவதாகவும் கூறினார். மேலும், அடுத்த 5 ஆண்டுகளில் மொரீஷியஸ் நாட்டினர் 5 லட்சம் பேர் இந்தியாவில் கல்வி பயில்வார்கள் என்றும் உறுதியளித்தார்.
மொரீஷியஸ் அதிபர் தரம் கோகூலுக்கு பிரதமர் மோடி மகா கும்பமேளாவின் புனித நீர், பீகாரை சேர்ந்த மக்கானா மற்றும் விநாயகர் சிலையை பரிசாக வழங்கினார். அதேபோல அவரது மனைவி பிருந்தா கோகூலுக்கு சடேலி பெட்டியில் பனாரஸ் பட்டுப் புடவையை பரிசாக வழங்கினார். கடந்த ஆண்டு தேசிய தின விழாவில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கலந்துகொண்ட நிலையில், இந்த ஆண்டு பிரதமர் மோடி கலந்து கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Read More: கடத்தப்பட்ட ரயிலில் 155 பேர் பத்திரமாக மீட்பு.. ராணுவ வீரர்கள், போலீசார் என 30 பேர் உயிரிழப்பு
இந்தியாவின் மானிய உதவியுடன் கட்டப்பட்ட சிவில் சர்வீஸ் கல்லூரி மற்றும் சலூக சுகாதார மையங்கள் ஆகியவற்றை பிரதமர் மோடி திறந்து வைக்கவுள்ளார். மேலும் இந்தப் பயணத்தின் போது பல புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் இருநாடுகளிடையே பரிமாறிக்கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
What's Your Reaction?






