'குண்டக்க மண்டக்க யோசிப்பதே பார்த்திபனுக்கு வேலையா போச்சு' - TEENZ விமர்சனம்

படம் முழுக்க பார்த்திபன் டச் இருக்கிறது.வசனம், காட்சியமைப்பில் பல புதுமை. பகலில் பேய் கதை, ஏலியன்களின் கடத்தல், கடைசியில் அவர்களுடன் டீலிங் என முத்திரை பதிக்கிறார். அவர் ரொம்ப சோகமாக, டல்லாக பேசுவது போராடிக்கிறது.

Jul 14, 2024 - 12:25
 0
'குண்டக்க மண்டக்க யோசிப்பதே பார்த்திபனுக்கு வேலையா போச்சு' - TEENZ விமர்சனம்
teenz movie review

புதுமை விரும்பி பார்த்திபன் இயக்கத்தில் 13 டீன்ஸ் பின்னணியில் உருவாகி இருக்கும் படம் teenz.  தனியார் பள்ளியில் படிக்கும் 13 மாணவர்கள் நாங்க வளர்ந்திட்டோம் என கெத்து காண்பிக்க, பள்ளியில் இருந்து எஸ்கேப் ஆகி பாட்டி கிராமத்தில் இருக்கும் பேய் அனுபவத்தை சந்திக்க ஒரு கிராமத்துக்கு செல்கிறார்கள்.

போகிற வழியில்  அவர்களுக்கு நடந்து என்ன? நண்பர்களில் பலர் ஏன் காணாமல் போகிறார்கள்? அவர்கள் கிடைத்தார்களா? அவர்களை கடத்தியது யார்? விஞ்ஞானி பார்த்திபன் டீன்ஸ்க்கு எப்படி உதவுகிறார்? என்பதுதான் கதை.

டீன் ஏஜ் மாணவர்களுக்கு உரிய கலாட்டா, மன நிலை, ஸ்லாங், சேஷ்டைகள் என கொஞ்ச நேரம் நகர்கிறது. அது கலகலப்பாக இருக்கிறது. கிராமத்துக்கு பயணம் தொடங்குவதில் இருந்து கதை சூடு பிடிக்கிறது. திடீரென நண்பர்கள் காணாமல் போக, மற்றவர்கள் பயப்படுவது, கதறுவது என விறுவிறுப்படைகிறது கதை. 

ஒரு திற ந்தவெளி ஏரியாவில் கதை நடப்பதும். திருப்பங்களும் சுவாரஸ்யம் நமக்கு பேய் பயம் வருகிறது. இரண்டாம் பாதியில் கடத்துபவர்களின் பின்னணி நோக்கம் தெரிகிறது. அதை விவரிக்கிறார் பார்த்திபன். வயதான விஞ்ஞானி கெட்டப்பில் வந்து நல்லது செய்து படத்தை முடித்து வைக்கிறார். பேய்க்கு பதில்   ஏலியன்கள் மிரட்டுவது, புதுமையான கிளைமாக்ஸ் ரசிக்க வைக்கிறது.

13 மாணவர்களும் போட்டி போட்டு நடித்து இருக்கிறார்கள். தங்கள் தனித்துவ திறமையை காண்பித்து இருக்கிறார்கள். சில சமயம் மட்டும் ஓவர் நட்பில் சினிமா தனம் காண்பிக்கிறார்கள். அவர்கள் கள் குடிக்க வைத்தது சரியா? சென்சார் எப்படி விட்டது? கவுரவ வேடத்தில் யோகிபாபு வருகிறார். அவர் காட்சிகள் பெரிதாக ஒட்டவில்லை.

ஆனாலும் படம் முழுக்க பார்த்திபன் டச் இருக்கிறது.வசனம், காட்சியமைப்பில் பல புதுமை. பகலில் பேய் கதை, ஏலியன்களின் கடத்தல், கடைசியில் அவர்களுடன் டீலிங் என முத்திரை பதிக்கிறார். அவர் ரொம்ப சோகமாக, டல்லாக பேசுவது போராடிக்கிறது.

இமான் இசை, பாடல்கள்,/ கவ்ரிக் ஆரி ஒளிப்பதிவு ஓகே. மாணவர்கள் பயந்து ஓடுவது சில சமயம் ரிபீட் மோடாக தெரிவது மைனஸ். அதே சமயம் அய்யன் காளி என்ற பெயர் கொண்ட கேரக்டரில் வரும் ஒரு மாணவன் செய்யும் செய்யும் செயல் நம் மனதில் நிற்கிறது. teenz பார்ட் 2வுக்கு லீடு கொடுத்து படத்தை முடிக்கிறார் பார்த்திபன்

வழக்கமான காதல், மசாலா, ஆக்‌ஷன், பேய் படங்களுக்கு மத்தியில் தனது குண்டக்க மண்டக்க திரைக்கதை, சீன்களால் ஓரளவு ரசிக்க வைக்கிறார் பார்த்திபன். திரைக்கரை, டீன்ஸ் நட்பு, குறும்பு, பயம் காரணமாக படமும் விறுவிறுபாக செல்கிறது. ஏலியன் காட்சிகள் புதுமை.  படத்தின் டிக்கெட் விலையும் 100 மட்டுமே என்பது பார்த்திபன் கொடுக்கும் சலுகை. 

ரேட்டிங் 3.25/ 5

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow