அந்தகன், மின்மினி, வீராயி மக்கள், பார்க் .எந்த படம் நல்லா இருக்குது? மினி விமர்சனம்

அந்தகன் படத்தின் கதை என்ன? மின்மினி பயணத்தை ரசிக்க முடிகிறதா? வீராயி மக்கள் கரு அழ வைக்கிறதா? பார்க் பட பேய்கள் மிரட்டியதா? இந்த வாரம் படங்களின் ரிசல்ட்

Aug 10, 2024 - 17:20
Aug 10, 2024 - 17:21
 0
அந்தகன்,  மின்மினி, வீராயி மக்கள், பார்க் .எந்த படம் நல்லா இருக்குது? மினி விமர்சனம்
சினிமா விமர்சனம்

இந்த வாரம் அந்தகன், மின்மினி, வீராயிமக்கள், பார்க், சூரியனும் சூரியகாந்தியும்,லைட் ஹவுஸ், கவுண்டம்பாளையம், பி2 ஆகிய 8
படங்கள் ரிலீஸ் ஆகி உள்ளன. இந்த படங்களின் மினி ரிவியூ இதோ

அந்தகன் ரேட்டிங் 3.5/5

இந்தியில் வெற்றி பெற்ற அந்தாதுான் படத்தில் ரீமேக். தியாகராஜன் இயக்க, பிரசாந்த், சிம்ரன், பிரியாஆனந்த், சமுத்திரக்கனி, ஊர்வசி, யோகிபாபு, கே.எஸ்.ரவிக்குமார் உட்பட பலர் நடித்துள்ளனர். கண் பார்வையற்ற பியானோ இசைக்கலைஞரான  பிரசாந்த்துக்கும், சிம்ரன், சமுத்திரக்கனி இணைந்து செய்த ஒரு கொலைக்கும் என்ன தொடர்பு. கொலையாளிகள் என்ன செய்கிறார்கள், பிரசாந்த் தனது புத்திசாலிதனத்தால் எப்படி தப்பிக்கிறார் என்பது கதை. பரபர திரைக்கதை, திருப்பங்கள், கிளைமாக்ஸ் ஆகியவை படத்தின் பலம். பிரசாந்த்தும், வில்லியாக வரும் சிம்ரனும் போட்டிபோட்டு நடித்திருக்கிறார்கள். இதுவரை நல்லவர்களாக நடித்த சமுத்திரக்கனி, ஊர்வசி, கே.எஸ்.ரவிக்குமார் ஆகியோரை மாறுபட்ட கே ரக்டரில் பார்ப்பது ரசிக்க வைக்கிறது. சில சீன்களில் வந்தாலும் கார்த்திக், வனிதா ஸ்கோர் செய்கிறார்கள். இரண்டாம் பாதியில் சற்றே தொய்வு ஏற்பட்டாலும், கிளைமாக்ஸ் அதை சரி செய்து விடுகிறது. பிரசாந்த், சிம்ரனை பிடிக்குமா? சஸ்பென்ஸ் கதை ரசிகரா? உங்களுக்கு அந்தகன் கண்டிப்பாக பிடிக்கும்.

மின்மினி 3.5/5

ஹலிதாஷமீம் இயக்கத்தில் பிரவீன், கவுரவ், எஸ்தர் நடிப்பில், மனோஜ்பரமஹம்சா ஒளிப்பதிவில் ஏ.ஆர்.ரகுமான் மகள் கதீஜா இசையில் வெளியான படம். பிரவீன், எஸ்தர் இருவரும் பைக்கில் இமயமலை பயணம் செய்கிறார்கள். அதற்கும் பல ஆண்டுகளுக்கு முன்பு ஊட்டி கான்வென்டில் நடந்த ஒரு விஷயத்துக்கும் என்ன லிங்க். அந்த பயணம் கற்று தந்த பாடம் என்பதை என்பதை கவிதை மாதிரி அழகாக சொல்லியிக்கிறார் இயக்குனர் ஹலிதா. பள்ளி மாணவர்களாக நடித்த அதே நடிகர்களை, 8 ஆண்டுகள் காத்திருந்து அவர்கள் வளர்ந்தவுடன் இளைஞராக நடிக்க வைத்து இருப்பது தமிழ்சினிமாவுக்கு புதுமை. முதற்பாதி கான்வென்ட், நட்பு, கலாட்டா என்றால், இரண்டாம்பாதி இமயமலை அழகு, அங்கு சந்திக்கும் மனிதர்கள் என்று உணர்ச்சி பெருக்காக செல்கிறது. கிளைமாக்ஸ், அந்த ஒரு டயலாக் டச்சிங். கதீஜா இசையும், மனோஜ் ஒளிப்பதிவும் படத்துக்கு பலம். மின்மினி பார்த்தால் நாம் படித்த பள்ளி, பழைய நண்பர்கள், கலாட்டா, நாம் சென்று வந்த தொலை துார பயணங்கள் நினைவுக்கு வருவது நிச்சயம்.

வீராயி மக்கள் 3.5/5

வீராயி மக்களான வேல.ராமமூர்த்தி, மாரிமுத்து, தீபா ஆகியோர் குடும்ப பிரச்னை காரணமாக பிரிந்து இருக்கிறார்கள். அவர்களை பிரித்தது எது? அவர்களை சேர்த்து வைக்க நினைக்கும் ஹீரோ சுரேஷ் நந்தா ஆசை நிறைவேறியதா என்பதை கிராமத்து பின்னணியில், குடும்ப உறவுகளை வலியுறுத்தும் கதையாக இயக்கியிருக்கிறார் நாகராஜ்கருப்பையா. குறிப்பாக, வேல.ராமமூர்த்தி, மாரிமுத்து, தீபா குடும்ப சண்டைகள், உணர்ச்சி போராட்டங்கள் பீல் பண்ண வைக்கிறது. கிராமத்து வெள்ளந்தி மனிதர்கள், அவர்களின் வாழ்வியல், காதல், அண்ணன்,  தம்பி குடும்ப தகராறு, தங்கையில் ஏக்கம் ஆகியவற்றை அழுத்தமாக காண்பித்து  இன்னொரு மாயாண்டி குடும்பத்தார் பாதிப்பை ஏற்படுத்துகிறார் இயக்குனர். சில குறைகள் இருந்தாலும், படம் பார்த்தால்  குடும்ப உறவுகள், ஈகோ சண்டை, அண்ணன், தம்பி, அக்கா, அத்தைமார் நினைவுக்கு வந்து. நீங்க கண்கலங்கலாம்

பார்க் 3/5


தமனும், ஸ்வேதா திருமணத்துக்கு தயாராகும்போது, அவர்களுக்கு பேய் பிடிக்கிறது. ஒரு பார்க்கில் கொலை செய்யப்பட்ட ஒரு காதல் ஜோடி அவர்கள் உடலில் புகுந்து சிலரை பழிவாங்குகிறது. திருமண தேதி நெருங்குவதால் பேயை விரட்ட நினைக்கிறார்கள். அது நடந்ததா? பார்க்கில் கொலை நடந்தது ஏன் என்பதை காதல், திரில்லர் கலந்து சொல்லியிருக்கிறார் இயக்குனர் இ.கே.முருகன். தமன், ஸ்வேதா சம்பந்தப்பட்ட காதல் காட்சிகள், பேய் ஓட்டும் காட்சிகள் ஓகே. வழக்கமான வில்லன்கள், வழக்கமான பழிவாங்கல் தொய்வை தருகிறது. பார்க் சம்பந்தப்பட்ட காட்சிகள் ஆறுதல். பிளாக் பாண்டியின் காமெடி ஆங்காங்கே சிரிப்பை வர வழைக்கிறது. இன்னும் திரைக்கதை அழுத்தமாக இருந்தால் பேய் மிரட்டியிருக்கும்

ரஞ்சித் இயக்கி, நடித்துள்ள கவுண்டம்பாளையம் கதை, நாடக காதல், சண்டை, சச்சரவுகளை சொல்கிறது. தமிழகத்தில் சில இடங்களில் மட்டுமே படம் ரிலீஸ் ஆகியுள்ளது. ஏ.எல்.ராஜா இயக்கத்தில் உருவான சூரியனும் சூரியகாந்தியும் படம், இயக்குனர் ஆக ஆசைப்படும் அப்புக்குட்டி வழியே கதையாக விரிகிறது. சூரியன், சூரிய காந்தி என்ற 2 பே ரின்  காதல் கதையை ஒரு தயாரிப்பாளரிடம் விவரிக்கிறார் அப்புக்குட்டி. ஜாதி பிரச்னையால் அந்த காதலுக்கு எதிர்ப்பு வர என்ன நடக்கிறது  அப்புக்குட்டி என்ன கிளைமாக்ஸ் வைக்கிறார் என்பது கரு. லைட் ஹவுஸ் படக்கதை, ஒரு சஸ்பென்ஸ் கரு. தலை வாசல் விஜய் சுடப்படுகிறார்.  அவரை சுட்டது யார்? என்ன காரணம் என்பதை துரோகம், பழிவாங்கல் பாணியில் விவரி்க்கிறது. p2 படத்தின் கதை, 2 பேர் ஏன் பேய் ஆனார்கள், அவர்களை விரட்ட நினைப்பவர்கள் யார்? அவர்கள் எண்ணம் நிறைவேறியதா? பே ய் ஆனவர்களின் எண்ணம் என்ன
 என்ற ரீதியில் செல்கிறது

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow