மது பிரியர்களுக்கு நற்செய்தி.. இனி கூடுதல் விலையில் விற்க முடியாது.. டாஸ்மாக் நிர்வாகம் அதிரடி

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் முறைகேடாக கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதை தடுக்க டிஜிட்டல் மூலமாக மது விற்பனை செய்ய டாஸ்மாக் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

Nov 13, 2024 - 21:23
Nov 13, 2024 - 21:32
 0
மது பிரியர்களுக்கு நற்செய்தி.. இனி கூடுதல் விலையில் விற்க முடியாது.. டாஸ்மாக் நிர்வாகம் அதிரடி
கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதை தடுக்க டிஜிட்டல் மூலமாக மது விற்பனை

கடந்த சில தினங்களுக்கு முன்பு, மதுபான சில்லறை விற்பனைக் கடைகளில் மதுபானங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதலாக ரூ.10 அல்லது அதற்கு மேல் கூடுதல் விலை வைத்து விற்பனை செய்தால் கடையின் மேற்பார்வையாளர் உட்பட அனைத்து பணியாளர்களையும் சஸ்பென்ட் செய்ய டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவிட்டது.

இதனையடுத்து டாஸ்மாக் கடை விற்பனையாளர் மட்டுமல்லாமல்  அனைத்து பணியாளர்களையும் பணியிடை நீக்கம் செய்வது தொடர்பாக டாஸ்மாக் நிர்வாகம் பிறப்பித்த சுற்றறிக்கையை ரத்து செய்ய வேண்டும் என தமிழ்நாடு டாஸ்மாக் விற்பனையாளர்கள் நல சங்கம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. 

அந்த மனுவில், 18 ஆண்டுகளாக பணியாற்றி வரும் 24 ஆயிரத்து 986 ஊழியர்களுக்கு பணி நிரந்தரம் வழங்கப்படாத நிலையில், தனிப்பட்ட ஊழியர்கள் செய்யும் தவறுக்கு அனைத்து ஊழியர்களையும் பணியிடை நீக்கம் செய்வது என்பது சட்ட விரோதமானது என கூறப்பட்டுள்ளது. 

காலணி ஆதிக்கத்தில் தான் இதுபோல தனிப்பட்ட நபர்களின் தவறுகளுக்கு ஒட்டுமொத்தமாக தண்டனைகள் விதிக்கப்பட்டதாகவும், அனைவருக்கும் தண்டனை விதிப்பது என்பது அரசியல் சாசனத்திற்கு விரோதமானது என்பதால் கடந்த அக்டோபர் 29ஆம் தேதி பிறப்பிக்கப்பட்ட இந்த சுற்றறிக்கையை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு நீதிபதி பரத சக்கரவர்த்தி முன் விசாரணைக்கு வந்தபோது, டாஸ்மாக் தரப்பை கேட்காமல் எந்த இடைக்கால உத்தரவையும் பிறப்பிக்க முடியாது எனத் தெரிவித்த நீதிபதி, நவம்பர் 27ஆம் தேதிக்குள் பதிலளிக்கும்படி, டாஸ்மாக் நிர்வாகத்துக்கு உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தார்.

இந்நிலையில், தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் முறைகேடாக கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதை தடுக்கவும் அனுமதிக்கப்பட்ட நேரத்தை விட மற்ற நேரங்களில் கள்ளத்தனமாக மது விற்பனை செய்வதை தடுக்கவும், மதுபான விற்பனையை டிஜிட்டல் மூலமாக டாஸ்மாக் நிர்வாகம் முடிவு செய்து இதற்காக 294 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கும் டிஜிட்டல் முறை விற்பனையை கொண்டு வரும் வகையில் ஆரம்ப கட்டமாக வடசென்னை, கோவை வடக்கு ஆகிய பகுதிகளில் உள்ள 266 டாஸ்மாக் கடைகளில் டிஜிட்டல் முறை விற்பனை நாளை முதல் தொடங்க உள்ளது.

இந்த டிஜிட்டல் முறை விற்பனையில் மது பிரியர்கள் மது வாங்கும் போது அதற்குரிய ரசீது டாஸ்மாக் பணியாளர்கள் மூலமாக வழங்கப்படும். மேலும், Gpay முறையிலும் மது வாங்கிக் கொள்ளலாம் என டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow