CISF வீரர்கள் சைக்கிள் பேரணி.. வேதாரண்யத்தில் உற்சாக வரவேற்பு!

இந்திய நாட்டின் கடல் பாதுகாப்பு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் மேற்கொள்ளும் சைக்கிள் பேரணி விழிப்புணர்வு இன்று வேதாரண்யம் வந்தடைந்த நிலையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

Mar 28, 2025 - 15:56
Mar 28, 2025 - 16:05
 0
CISF வீரர்கள் சைக்கிள் பேரணி..  வேதாரண்யத்தில் உற்சாக வரவேற்பு!
CISF வீரர்கள் சைக்கிள் பேரணி.. வேதாரண்யத்தில் உற்சாக வரவேற்பு!

மத்திய தொழில் பாதுகாப்பு படை (CISF) வீரர்கள் நாட்டின் கடல் எல்லை பாதுகாப்பு, போதைப் பொருள் இல்லாத சமூகம், கடல் பாதுகாப்பில் மீனவர்களின் பங்களிப்பு  ஆகியவற்றை வலியுறுத்தி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், கடந்த மார்ச் 07 ஆம் தேதி முதல் குஜராத் மாநிலம், லக்பத் கோட்டை மற்றும் மேற்குவங்க மாநிலம் பக்காளி கடற்கரையில் இருந்து இரு பிரிவுகளாக சைக்கிள் பேரணி தொடங்கியது. ‘பாதுகாப்பான கடல்வளம், செழிப்பான இந்தியா’ என்ற கருப்பொருளுடன் நடத்தப்படுகிறது. அதில், ஒரு பிரிவினரின் சைக்கிள் பேரணி நாகை மாவட்டம் வேதாரண்யம் வந்தடைந்தது. 

மேற்கு வங்க மாநிலத்தில் தொடங்கிய மத்திய தொழில் பாதுகாப்பு படையின்  25 நாள் விழிப்புணர்வு சைக்கிள் பேரணி கடந்த 7ம் தேதி தொடங்கியது. 22 ஆம் நாளான இன்று நாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதிக்கு சைக்கிளில் மத்திய தொழில் பாதுகாப்பு படை  வீரர்கள் வந்தனர் . சாலையில் இருபுறமும் கூடியிருந்த பொதுமக்கள் மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். 

சைக்கிள் பேரணி குழுவினருக்கு சர்தார் வேதரத்தினத்தின் பேரன் கேடிலியப்பன், பாராளுமன்ற முன்னாள் உறுப்பினர் பி .வி ராஜேந்திரன், ரோட்டரி சங்கத்தினர் வரவேற்பு கொடுத்தனர். தேச பாதுகாப்பு, பாதுகாப்பான கடற்கரையையும் உருவாக்க கடலோர மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த இந்த சைக்கிள் பேரணி நடைபெறுகிறது. சைக்கிள் விழிப்புணர்வு பேரணியினர் வேதாரண்யம் அடுத்த அகஸ்தியம்பள்ளியில் உள்ள உப்பு சத்தியாகிரக ஸ்தூபியில், மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். 

முன்னதாக சர்தார் வேதரத்னம், வைரப்பன் உள்ளிட்ட சுதந்திரப் போராட்ட தியாகிகளின் சிலைகளுக்கு மலர் மாலையிட்டு அஞ்சலி செலுத்தினர். 6553 கிலோ மீட்டர் தொலைவு நடைபெறும் இந்த விழிப்புணர்வு சைக்கிள் பேரணி வரும் மார்ச் 31ஆம் தேதி  கன்னியாகுமரியில் நிறைவடைய உள்ளதாக மத்திய தொழில் பாதுகாப்பு படையின் அதிகாரி சிவகுமார் தெரிவித்தார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow