சென்னை மக்களின் ஏரிகளில் 8,568 மில்லியன் நீர் மட்டம் கன அடி இருப்பு...

சென்னை மக்களின் குடிநீர் ஆதாரமாக இருக்கும் நீர்நிலைகளின் மொத்தக் கொள்ளளவான 11,757 மில்லியன் கன அடியில்  தற்போது 8,568 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Dec 8, 2024 - 10:07
 0
சென்னை மக்களின் ஏரிகளில் 8,568 மில்லியன் நீர் மட்டம் கன அடி  இருப்பு...
ஏரிகளின் நீர் மட்டம் 8,568 மில்லியன் கன அடி இருப்பு

சென்னை மக்களின் குடிநீர் ஆதாரமாக இருக்கும் நீர்நிலைகளின் மொத்தக் கொள்ளளவான 11,757 மில்லியன் கன அடியில்  தற்போது 8,568 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளதாக நீர் வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சென்னை மக்களின் குடிநீர் ஆதாரமாக இருக்கும் நீர்த்தேக்கங்களில் மொத்தக் கொள்ளளவான 11,757 மில்லியன் கன அடியில்  தற்போது 8,568 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளதாக நீர் வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

இதில் பூண்டி ஏரியின் மொத்த கொள்ளளவான 3.231 மில்லியன் கன அடியில் தற்போது இருப்பு 2,393 மில்லியன் கன அடியாக உள்ளது,  ஏரிக்கு நீர் வரத்து வினாடிக்கு 1780 கன அடியாகவும், நீர் வெளியேற்றம் 27 கன அடியாகவும் உள்ளது. 

அதேபோல் புழல் ஏரியின் மொத்த கொள்ளளவான 3300 மில்லியன் கன அடியில் தற்போது நீர் இருப்பு 2,768 மில்லியன் கன அடியாக உள்ளது.  தொடர்ந்து ஏரிக்கு நீர் வரத்து இல்லை, நீர் வெளியேற்றம் 209 கன அடியாகவும் உள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த கொள்ளளவான 3645 மில்லியன் கன அடியில் தற்போது இருப்பு 2,860 மில்லியன் கன அடியாக உள்ளது.

நீர் வரத்து வினாடிக்கு 160 கன அடியாகவும், நீர் வெளியேற்றம் 135 கன அடியாகவும் வெளியேற்றப்பட்டு வருகிறது‌. சோழவரம் ஏரியின் மொத்த கொள்ளளவான 1,081 மில்லியன் கன அடியில் தற்போது இருப்பு 0.224 மில்லியன் கன அடியாக உள்ளது. நீர் வரத்தும் வினாடிக்கு 90 கன அடியாகவும், நீர் வெளியேற்றமும் இல்லை. 

கண்ணன்கோட்டை ஏரியின் மொத்த கொள்ளளவான 500 மில்லியன் கன அடியில் தற்போது இருப்பு 323 மில்லியன் கன அடியாக உள்ளது. ஏரிக்கு நீர் இல்லை, நீர் வெளியேற்றம் 15 கன அடியாகவும் வெளியேற்றப்பட்டு வருகிறது‌. மொத்தத்தில் திருவள்ளூர் மாவட்டத்தில்  இருந்து சென்னை மக்களுக்கு குடிநீர் வழங்கும் முக்கிய நீர்நிலைகளின் மொத்தக் கொள்ளளவான 11,757 மி.கன அடியில் தற்போது 8,568 மில்லியன் கன அடியாக நீர் இருப்பு உள்ளதாக நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow