யூடியூபர் இர்ஃபான் விவகாரம் - பெண் மருத்துவருக்கு நோட்டீஸ்

யூடியூபர் இர்ஃபான் விவகாரத்தில் தமிழ்நாடு மெடிக்கல் கவுன்சில் சம்பந்தப்பட்ட மருத்துவருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

Nov 6, 2024 - 02:40
 0
யூடியூபர் இர்ஃபான் விவகாரம் - பெண் மருத்துவருக்கு நோட்டீஸ்
youtuber irfan
யூடியூபர் இர்ஃபான் விவகாரம் - பெண் மருத்துவருக்கு நோட்டீஸ்

யூடியூபர் இர்ஃபான் தனக்குப் பிறந்த குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டிய விவகாரத்தில் தனியார் மருத்துவமனையின் பெண் மருத்துவருக்கு தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

பிரபல யூடியூபரான இர்ஃபான் -ஆசிபா தம்பதிக்கு கடந்த ஜூலை மாதம் சென்னை சோழிங்கநல்லூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் குழந்தை பிறந்தது. குழந்தை பிறக்கும் போது அறுவை சிகிச்சை அறையில் குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டும் வீடியோவை இர்ஃபான் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டிருந்தார். 

இது தமிழ்நாடு மருத்துவ சட்டத்தின்படி தவறு என டாக்டர்கள் உட்பட பல்வேறு தரப்பிலும் கண்டனங்கள் தெரிவித்தனர்.அதன் பின்னர் தனது யூடியூபர் சேனலில் இருந்து அது குறித்த வீடியோவை நீக்கினார். முன்னதாக கடந்த ஆண்டு தனக்கு பிறக்கும் குழந்தையின் பாலினத்தை துபாயில் பரிசோதித்து அது தொடர்பான வீடியோவை வெளியிட்டு சர்ச்சையில் சிக்கினார். இந்த நிலையில் குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டும் வீடியோவிற்கு பல்வேறு தரப்பிலும் கண்டனம் எழுந்த நிலையில், தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலில் புகார் அளிக்கப்பட்டது. இது குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன், சட்டவிதிகளை மீறி யார் செயல்பட்டாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியாக தெரிவித்தார்.

இந்த நிலையில், யூடியூபர் இர்ஃபானுக்கு குழந்தை பிறந்த போது குழந்தையின் தொப்புள் கொடியை தானே வெட்டுவது போன்றும் வீடியோ வெளியிட்டார். இது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட மருத்துவ அதிகாரிகள் சம்பந்தப்பட்ட மருத்துவமனை மீது பத்து நாள் உரிமத்தை ரத்து செய்தனர். மேலும் சம்பந்தப்பட்ட மருத்துவர் நிவேதிதா மற்றும் இர்ஃபான் மீது காவல்துறை புகார் அளித்தனர்.மேலும் மருத்துவர் மீது தமிழ்நாடு மெடிக்கல் கவுன்சிலில் புகார் கொடுத்தனர். இது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட தமிழ்நாடு மெடிக்கல் கவுன்சில் சம்பந்தப்பட்ட மருத்துவருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow