இசை வாணி தவறாக பாடவில்லை... கொலை மிரட்டல் விடுக்கும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர்... செல்வப் பெருந்தகை!

“பாடகி இசைவாணிக்கு ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் கொலை மிரட்டல் விடுக்கின்றனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப் பெருந்தகை தெரிவித்துள்ளார்.

Nov 30, 2024 - 02:09
 0
இசை வாணி தவறாக பாடவில்லை... கொலை மிரட்டல் விடுக்கும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர்... செல்வப் பெருந்தகை!
இசை வாணி தவறாக பாடவில்லை... கொலை மிரட்டல் விடுக்கும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர்... செல்வப் பெருந்தகை!

சென்னை சத்தியமூர்த்தி பவனில் இன்று (நவ. 29), தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “மக்களை நம்பாமல் இயந்திரங்களை நம்பி தேர்தல் நடத்தப்பட்டு வருகிறது. விஞ்ஞானத்தை பாஜக தவறான முறையில் பயன்படுத்துகிறது. இந்த தேசம் அதானி, அம்பானிக்காக மட்டும்தான் இருக்கிறதா ? பா‌ஜக அரசு பெரிய பெரிய தொழிலதிபர்களுக்கு கடன் தள்ளுபடி வழங்கி வருகிறது. 2022 முதல் 2023 - ஆம் ஆண்டு 2 லட்சம் கோடிக்கு மேல் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. 2023 முதல் 2024 -ஆம் ஆண்டு 22 லட்சம் கோடி அளவில் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் முறையாக தேர்தல் நடத்தப்படவில்லை. ஜனநாயகத்தின் மீது நாங்கள் நம்பிக்கை வைத்திருக்கிறோம். அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளுக்கு இ.வி.எம். இயந்திரத்தின் மீது நம்பிக்கை இல்லை. இனிவரும் காலங்களில் பா‌ஜக அரசு வாக்குச்சீட்டு முறையை நடைமுறைப்படுத்த வேண்டும். தமிழ் மொழி, திருக்குறள் பற்றி பேசும் பிரதமர் மோடி, தமிழ்நாட்டில் உத்திரமேரூர் கல்வெட்டில் உள்ள குடஓலை முறையை நடைமுறைபடுத்துவாரா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். இசை வாணி ஐந்து ஆண்டுகள் முன்பு ஐயப்பன் பாடலை ஒன்றை பாடியுள்ளார். அதில் எந்த தவறும் இல்லை. இதுதொடர்பாக ஆர்‌.எஸ்.எஸ் சேர்ந்தவர்கள் புகார் கொடுத்து வருகின்றனர். இசை வாணி தவறாக பாடி இருந்தால் அவர் மீது நடவடிக்கை எடுக்கலாம். அவருக்கு கொலை மிரட்டல் விடுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அவருக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும். 

நடிகை கஸ்தூரி மீது நடவடிக்கை எடுத்ததற்கு காரணம் அவர் ஒரு மொழியையும், இனத்தையும் இழிவு படுத்தி பேசியிருந்தார். இசைவாணி பாடிய பாடல் மதத்தை இழிவுப்படுத்தும் வகையில் இல்லை. நானும் இந்து தான். நானும் ஐய்யப்பன் கோயிலுக்கு சென்று இருக்கிறேன். இந்த விவகாரத்தை ஆர்.எஸ்.எஸ். வேண்டுமென்றே பெரிதுபடுத்தி வருகிறது. தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்‌. இளங்கோவன் உடல்நலம நல்லமுறையில் முன்னேறி வருகிறது” எனத் தெரிவித்துள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow