எங்களுக்கு அந்த எண்ணம் கிடையாது.. ஆனால் சாத்தியம் இல்லை.. அமைச்சர் ரகுபதி சொன்ன விஷயம்

தமிழகத்தில் மது இருக்க வேண்டும் என்ற எண்ணம் எங்களுக்கு கிடையாது என்றும் தமிழகத்தில் மட்டும் மது ஒழிப்பு கொண்டு வருவது சாத்தியம் இல்லை என்றும் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.

Oct 3, 2024 - 12:28
Oct 3, 2024 - 12:29
 0
எங்களுக்கு அந்த எண்ணம் கிடையாது..  ஆனால் சாத்தியம் இல்லை.. அமைச்சர் ரகுபதி சொன்ன விஷயம்

சென்னை தேனாம்பேட்டை அமைந்துள்ள அண்ணா அறிவாலயத்தில் தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்கள் சந்தித்து பேட்டி அளித்தார். அப்போது பேசிய அமைச்சர் ரகுபதி, "ஆளுநர் ரவி தான் ஆளுநர் என்பதை மறைந்துவிட்டது ஒரு அரசியல்வாதி போல் செயல்பட்டு வருகிறார். ராஜ்பவன் இன்றைக்கு  அரசியல் பவனாக மாற்றப்பட்டு வருகிறது. தமிழகத்தில் கமலாலயத்துக்கு போட்டியாக ராஜ்பவன் டெல்லியின் சார்பாக அரசியல் செய்து வருகிறது.

ஒரு ஆளுநராக  இந்திய அரசுக்கு மாநில அரசுக்கும் இருக்கும் உறவினை உருவாக்கும் நபராக இருக்க வேண்டும். ஆனால் நம் ஆளுநர் அந்த உறவை  எந்தெந்த வகையில் துண்டிக்க முடியுமோ அந்தந்த வகையில் அவருடைய நடவடிக்கைகள் அமைந்து இருக்கிறது. ஆன்லைன் ரம்மி யின் பிராண்ட் அம்பாசிடர் போலவும், நீட் தேர்வின் பி.ஆர்.வோ போலவும் செயல்பட்டு வருகிறார்” 

”காந்தி மண்டபம் வளாகத்தில் மது பாட்டில்கள் கண்டறியப்பட்டுள்ளது என்றும்  அது மிக வருத்தம் அளிக்கிறது என கூறியுள்ளார் ஆளுநர். சென்னை மாநகராட்சி காந்தி மண்டபம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பகல் நேரங்களில் சிறப்பான சுத்தம் செய்யும் பணிகளை மேற்கொண்டு வருகிறது. அதிகமாக குப்பை  இருக்கும் இடமான மெரினா கடற்கரை கூட சுத்தமாக வைத்துக் கொள்ளும் அரசாங்கம் தமிழகத்தில் செயல்பட்டு வருகிறது. 

வீட்டை  நாம் பாதுகாப்பாக தான் வைத்துக் கொண்டிருக்கிறோம் ஆனால் வீட்டில் ஒரு திருடன் பூந்து விட்டால் நம் வீட்டில் பாதுகாப்பு இல்லை என கூறிவிட முடியாது, ஏன் திருடன் வரும்பொழுது பாதுகாப்பு குறைவாக இருந்தது என்று கண்டறிவதை விட்டுவிட்டு பாதுகாப்பு குறைவாக உள்ளது என்று மட்டும் கூறிக் கொண்டிருப்பதில் எந்த விதமான அர்த்தமும் கிடையாது. காந்தி மண்டப வளாகத்தில் மது பாட்டில்கள் உள்ளது என அவருடைய மன உளைச்சலை வெளிப்படுத்தியுள்ளார். அவருக்கும் தெரியும் காந்தியடிகள் சூதாட்டத்தை ஒழிக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார். ஆனாலும் இந்திய முழுவதும்  பல  சூதாட்டங்கள் நடந்து கொண்டு வருகிறது” என சாடினார்.

தொடர்ந்து பேசிய அவர், “திமுக அரசு மதுவிலக்குக்கு  எப்போதும் ஆதரவாக இருக்கும் அரசு. ஆனால் மது ஒழிப்பை தமிழ்நாடு அரசு மட்டும் கையில் எடுக்க முடியாது. அனைத்து மாநிலங்களை ஒன்றிணைத்து  மத்திய அரசு தான் அந்த திட்டத்தை கையில் எடுக்க வேண்டும். மத்திய அரசு எடுக்கும் நடவடிக்கைக்கு அதிகப்படியான முன்னுரிமை மற்றும் முக்கியத்துவம் அளிக்கும் முதலமைச்சராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இருக்கிறார்.

மேலும் படிக்க: ரஜினி பேசும் நீளமான டயலாக்.. சமூக பிரச்சனையை பேசும் ’வேட்டையன்’ டிரெய்லர் வெளியானது

தமிழகத்தில் மது இருக்க வேண்டும் என்ற எண்ணம் எங்களுக்கு கிடையாது. ஆனால் அருகாமையில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் மது இருக்கிறது. இந்தியா முழுவதும் ஒரு திட்டம் செயல்பட்டால் மட்டுமே மது ஒழிப்பு நடைபெறும். மற்ற மாநிலங்களில் மது ஒழிப்பு இல்லாத நிலையில் நம் மாநிலத்தில் மட்டும் மது ஒழிப்பு கொண்டு வருவது சாத்தியம் இல்லை. தமிழகத்தில் மட்டும் கொண்டு வந்தால் இங்கு கள்ளச்சாராயம் பெருகும். இதன் காரணமாக இந்தியா முழுவதும் மதுவிலக்கு கொண்டு வர வேண்டும். இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்த பிறகு இந்தியா முழுவதும் மது ஒழிப்பு நடைமுறை ஏற்படுத்த முயற்சி செய்வார் முதலைச்சர் மு.க.ஸ்டாலின்” என தெரிவித்தார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow