ரஜினி பேசும் நீளமான டயலாக்.. சமூக பிரச்சனையை பேசும் ’வேட்டையன்’ டிரெய்லர் வெளியானது

ஞானவேல் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் திரைப்படத்தின் டிரெய்லர் இன்று வெளியாகியுள்ளது

Oct 2, 2024 - 23:28
 0
ரஜினி பேசும் நீளமான டயலாக்.. சமூக பிரச்சனையை பேசும் ’வேட்டையன்’ டிரெய்லர் வெளியானது

ஜெயிலர், லால் சலாம் படங்களைத் தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்துள்ள திரைப்படம் வேட்டையன். ‘ஜெய்பீம்’ புகழ் தசெ ஞானவேல் இயக்கியுள்ள வேட்டையன் படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது, அனிருத் இசையமைத்துள்ளார். ரஜினியுடன் அமிதாப் பச்சன், ஃபஹத் பாசில், ராணா, மஞ்சு வாரியர், துஷாரா விஜயன், ரித்திகா சிங், அபிராமி என பான் இந்தியா நட்சத்திரங்களும் இப்படத்தில் நடித்துள்ளனர். அதேபோல், கோலிவுட் ராக்ஸ்டார் அனிருத் வேட்டையன் படத்திற்கு இசையமைத்துள்ளார்.  

வேட்டையன் படத்தில் ரஜினிகாந்த் போலீஸ் கேரக்டரில் என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட்டாக நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. தர்பார் படத்துக்குப் பின்னர் ரஜினி போலீஸ் கேரக்டரில் நடித்துள்ளது வேட்டையனில் தான். இதனால் இப்படத்தில் சூப்பர் ஸ்டாரின் ஆக்ஷன் ட்ரீட் இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். இதனிடையே இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சில தினங்களுக்கு முன்னர் சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்றது. அப்போது வேட்டையன் படத்தின் ப்ரிவியூவை படக்குழு வெளியிட்டது. 

அதன் தொடர்சியாக வேட்டையன் டிரெய்லர் இன்று வெளியாகியுள்ளது. இந்த டிரெய்லர் பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் வன்கொடுமையை பற்றியும் அதற்காக எடுக்கப்படும் நடவடிக்கை குறித்து பேசுகிறது. முதலில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்காக கல்லூரி முன் போராட்டம் நடத்தும் காட்டியோடு தொடங்குகிறது இந்த டிரெய்லர். ஆரம்பத்திலேயே சமூகத்தின் நிலையை சுட்டிகாட்டும் விதமாக, “இந்த நாட்டுல பொண்ணுங்களுக்கு பாதுகாப்பு இல்ல, ஆனா பொறுக்கிங்க பாதுகாப்பா இருக்காங்க” என்ற வசனங்கள் இடம்பெற்றிருக்கிறது. சட்டம் ஒழுங்கை சரிசெய்ய முடியாத அசாதாரண சூழல் நிலவும் போது காவல்துறைக்கு நல்ல பெயர் வாங்கித் தர எண்ட்ரீ கொடுக்கிறார் ரஜினி.

இவரை பணி செய்ய விடாமல் தடுக்கும் வில்லன்கள். அதையும் தாண்டி எப்படி அநியாயத்தை தட்டிக் கேட்டு நியாயத்தை நிலைநாட்டுகிறார் என்பதே வேட்டையன் சொல்லப்போகும் கதை. மேலும், டிரெய்லரில் “அநியாயம் நடக்கும்போது போலீஸ் அமைதியா இருக்குறத விட அதிகாரத்த கையில எடுக்குறது தப்பில்ல..” என ரஜினி பேசும் வசனம், திருடன்னா முகமூடி போடணும்னு அவசியம் இல்ல, கொஞ்சம் மூளை இருந்தா போதும் என ஃபகத் ஃபாசில் சொல்லும் வசனம் எல்லாம் தியேட்டரில் நல்ல வரவேற்ப்பை பெறும் என்பதில் சந்தேகமே இல்லை.. என்னதான் இதே கான்செப்ட்டில் பல படங்கள் வந்திருந்தாலும், வேட்டையன் இதிலிருந்து எப்படி தனித்து நிற்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்..

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow