”கல்லூரிகளை மூடிவிடலாம்” - தமிழக அரசை கடுமையாக சாடிய உயர்நீதிமன்றம்

அரசு சட்ட கல்லூரிகளில் நிரந்தர இணை பேராசிரியர், உதவி பேராசிரியர்களை நியமிக்க முடியாவிட்டால், கல்லூரிகளை மூடிவிடலாம் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

Oct 3, 2024 - 00:20
 0
”கல்லூரிகளை மூடிவிடலாம்” - தமிழக அரசை கடுமையாக சாடிய உயர்நீதிமன்றம்

அரசு சட்ட கல்லுரிகளில் நிரந்தர இணை பேராசிரியர், உதவி பேராசிரியர்களை நியமிக்க முடியாவிட்டால், கல்லூரிகளை மூடிவிடலாம் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் அரசு சட்டக் கல்லுரிகளில் காலியாக உள்ள  இணைப் போரசிரியர் பணிக்கு நேரடி நியமனங்கள் மேற்கொள்ளக் கோரி வசந்தகுமார் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.

தமிழகத்தில் உள்ள 15 அரசு சட்டக் கல்லூரிகளில்,  அனுமதிக்கப்பட்ட 20 இணை பேராசிரியர் பணியிடங்களில் 19 பணியிடங்கள் காலியாக உள்ளது என  தமிழக அரசு தரப்பில் பதில் மனு அளிக்கப்பட்டிருந்தது.

206 உதவிப் பேராசிரியர்  பணியிடங்களில், 70  பணியிடங்கள் காலியாக உள்ளது என சட்டகல்வி இயக்குனர் பதில் மனு அளித்திருந்தார்

இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த போது, “சட்டக் கல்லூரிகளில் அதிக காலியிடங்கள் இருப்பது   துரதிர்ஷ்டவசமானது என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி தெரிவித்திருந்தார்.

தகுதியான ஆசிரியர்களை நியமிக்காமல், கவுரவ விரிவுரையாளர்கள் மூலம் பாடம் நடத்துவது மாணவர்களின் எதிர்காலத்தை பாழாக்கி விடும் எனவும் அவர் தெரிவித்திருந்தார்.

அரசு சட்ட கல்லுரிகளில் நிரந்தர இணை பேராசிரியர், உதவி பேராசிரியர்களை நியமிக்க முடியாவிட்டால், கல்லூரிகளை மூடிவிடலாம் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம்

மேலும், இந்த வழக்கின் விசாரணை அக்டோபர் 15 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.காலிப் பணியிடங்களை நிரப்புவது தொடர்பாக அக்டோபர் 15ம் தேதி சட்டத்துறை செயலாளர் நேரில் ஆஜராக வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow