மது விலக்கை உடனே செய்ய முடியாது.. அறிவுபூர்வமாக அணுக வேண்டும் - செல்வப்பெருந்தகை

மது விலக்கை அறிவுபூர்வமாக அணுக வேண்டும் என்றும், எடுத்தேன் கவிழ்த்தேன் என்று செய்துவிட முடியாது என்றும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.

Sep 16, 2024 - 12:45
Sep 16, 2024 - 12:50
 0
மது விலக்கை உடனே செய்ய முடியாது.. அறிவுபூர்வமாக அணுக வேண்டும் - செல்வப்பெருந்தகை
மது விலக்கை அறிவுபூர்வமாக அணுக வேண்டும் - செல்வப்பெருந்தகை

ராமசாமி படையாச்சியாரின் 107வது பிறந்த நாளையொட்டி சென்னை கிண்டியில் உள்ள அவரது உருவப்படத்துக்கு, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், "காங்கிரஸ் பேரியக்கத்தின் உடைய சித்தாந்தத்தையும் கொள்கை கோட்பாடுகளையும் உள்வாங்கியவர். தமிழ்நாட்டில் சாதி மத மோதல்களுக்கு எதிராக குரல் கொடுத்தவர். இன மோதல்களையும் மத மோதல்களையும் எதிர்த்து போராடியவர். இட ஒதுக்கீடுக்காக குரல் கொடுத்தவர். பிற்படுத்தப்பட்ட மக்களும், விளிம்பு நிலை மக்களும் முன்னேற வேண்டுமென்று எல்லா சமூகத்திற்காகவும் குரல் கொடுத்த மாபெரும் தலைவர்.

விசிக மாநாடு குறித்து இதுவரை அழைப்பு இல்லை. அழைப்பு வந்தால் அகில இந்திய தலைமையிடம் ஆலோசனை செய்து முடிவு எடுக்கப்படும். மகாத்மா காந்தியின் கொள்கையும் பூரண மதுவிலக்கு தான். அதில் காங்கிரஸ் என்றைக்கும் விலகியது கிடையாது. அரசியல் இல்லாமல் எதுவுமே கிடையாது எல்லாம் அரசியலைச் சார்ந்ததுதான். அரசியலையோ, கூட்டங்களையோ பிரித்துப் பார்க்க முடியாது.

ஆகவே மகாத்மா காந்தி பிறந்த மண்ணில் படி படியாக மதுவை குறைத்தாலும் காங்கிரஸ் அதை ஆதரிக்கிறது. அறிவியல் அறிவுபூர்வமாக மது விலக்கை அணுக வேண்டும். எடுத்தேன் கவிழ்த்தேன் என்று செய்துவிட முடியாது. தமிழ்நாட்டினுடைய தட்பவெப்ப நிலை, மக்களுடைய மனநிலை ஆகியவற்றை ஆய்வு செய்து முடிவெடுப்பார் என நம்பிக்கையோடு இருக்கிறோம்.

மாநாட்டிற்கும், இந்தியா கூட்டணிக்கும் சம்பந்தமில்லை. இந்தியா கூட்டணி என்பது அரசியல் கணக்கு மட்டும் இல்லை. அதற்கு அப்பாற்பட்ட தேச ஒற்றுமை, மண்ணை காப்பாற்றுவது அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாப்பது ஆகியவையும் அடங்கும். கூட்டணியில் ஒரு சலசலப்பும் இல்லை. இந்திய கூட்டணி மிகவும் வலிமையாக இருக்கிறது. முதலமைச்சர் அமெரிக்காவில் இருந்து வந்திருக்கிறார். எல்லோரும் அவரை சந்திக்க இருக்கிறார்கள்" என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், "ஹெச்.ராஜா தொடர்ந்து வண்ணமாக பேசுவார் என்று தம் தமிழ்நாட்டு மக்கள் அறிந்த உண்மை. தலைவர் ராகுல் காந்தி அமெரிக்காவில் பேசிய பேச்சை எல்லாம் இட்டுக்கட்டி அவதூறு பேசுகிறார். தேச துரோகி என்று பேசுகிறார். இது போன்ற செயலை ஹெச்.ராஜா கைவிட வேண்டும். யார் தேசத்திற்கு எதிராக செயல்பட்டார்கள்? எந்தெந்த தலைவர்கள் பிரிட்டிஷ்காரர்களிடம் அடிமை சாசனத்தை எழுதி கொடுத்து, விடுதலைப் போராட்டத்தில் இருந்து விலகுகிறோம் என்று சொன்னார்கள்? என்ற சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

இனிவரும் காலங்களில் ராகுல் காந்தி பற்றியோ, காங்கிரஸ் பேரியக்கம் பற்றியோ ஆதாரங்கள் இல்லாமல் கொச்சைப்படுத்தினால் ஹெச்.ராஜா தமிழ்நாட்டில் எங்கு சென்றாலும் காங்கிரஸ் முற்றுகை போராட்டத்தை முன்னெடுக்கும் என்பதை இறுதி எச்சரிக்கையாக சொல்லுகிறோம்” என்றார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow