கெட்ட வார்த்தையில கவிதை எழுதினேன், டாக்டருக்கு படிக்க சொன்னார் அப்பா - இந்தியன் 2 பிரஸ் மீட்டில் கமல்ஹாசன்

இந்தியன்2 பட பிரஸ்மீட்டில் செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த கமல்ஹாசன், யெஸ், நான் தாத்தாதான். எனக்கு இந்த படத்தில் ஜோடி இல்லை என்பதில் வருத்தம் இல்லை. கள்ளச்சாராயம் பெருக இதுதான் காரணம் என பல விஷயங்களை வெளிப்படையாக பேசினார்.

Jul 6, 2024 - 19:03
Jul 8, 2024 - 15:29
 0
கெட்ட வார்த்தையில கவிதை எழுதினேன், டாக்டருக்கு படிக்க சொன்னார் அப்பா - இந்தியன் 2 பிரஸ் மீட்டில் கமல்ஹாசன்
Actor Kamal Haasan Speech At Indian 2 Press Meet

சென்னை: ஷங்கர் இயக்க, கமல்ஹாசன் நடிக்கும்  இந்தியன் 2 படத்தின் பிரஸ்மீட்,  மும்பையில் நடந்தது. அடுத்ததாக, சென்னை நட்சத்திர ஓட்டலில் இன்று நடந்தது. அப்போது செய்தி்யாளர்களின் பல கேள்விகளுக்கு காரசாரமாக, சுவாரஸ்யமாக பதில் அளித்தார் கமல்ஹாசன்.

கமல்ஹாசன் தனது கேள்வி, பதில் செஷனில் ‘‘நாம காந்தி வழியில் சத்தியாகிரகம் செய்து சுதந்திரம் வாங்கினோம். ஆனால், இந்தியன் 2 படத்தில் நான் நேதாஜி வழியில் போகிறேன் சொல்றீங்க. இந்த காலகட்டத்தில் இன்றைய சமூக பிரச்னை, அரசியல் பிரச்னைகளுக்கு எதிராக நேதாஜி வழியை நாம் தேர்ந்தெடுக்க வேண்டுமா’ என்று கேள்வி கேட்கப்பட, ‘‘சில விஷயங்களை பார்த்து ரசிக்க வேண்டும். அதற்குள் போகக்கூடாது. ரவுத்திரம் பழகு என்றார் பாரதி. அதை பழக கூடாது. புருஸ்லீ படம் பார்த்துவிட்டு மாமன், மச்சான்னு நாலு பெயரை அடிக்க கூடாது. அந்த கலையை ரசித்துவிட்டு வீட்டில் அனைவருடன் இருந்து சாப்பிட வேண்டும். நாவை வெட்ட வேண்டும் என்று சொல்லுவோம். அதை செய்யக்கூடாது. அந்த மாதிரி , இந்தியன் தாத்தா மாதிரி நிஜ வாழ்க்கையில் வன்முறை கூடாது. காந்தியின் பொறுமை, நேதாஜி வீரம் இரண்டுமே பாராட்ட பட வேண்டும். நேதாஜி வழியில் வீரம், வெட்டு, குத்து மட்டுமல்ல, பயணம், பட்டினி, ஒருங்கிணைப்பு என பல விஷயங்கள் இருந்தன. அதை குறைத்து மதிப்பிடக்கூடாது. காந்தி மட்டுமல்ல, நேதாஜி மட்டுமல்ல,பல சட்ட போராட்டங்கள் மட்டுமல்ல, களின் உணர்வு நமக்கு சுதந்திரம் கிடைக்க காரணம். பல்முனை தாக்குதல்களால் வெள்ளைகாரன் ஓடினான். நமக்கும் இருக்கும் வில்லனை காண்பிப்பதே, இந்த படத்தின் வில்லன் செய்யும் வேலை. கலைஞர்களாக எல்லா கால கட்டத்தையும் தொட்டு பார்க்கலாம். கவிஞர்களாக உணர்ந்து பார்க்கலாம்.அதேசமயம், வன்முறை எப்போதும் தீர்வாகாது. இந்த படம் பான் இந்தியன் படம் மட்டுமல்ல, பான் இந்தியன் வீரம், பான் இந்தியன் குற்ற உணர்வு, பான் இந்தியன் தாட்’’ என்றார் விரிவாக.


கமலிடம் ‘‘இந்தியன் முதற்பாகத்தில் உங்களுக்கு 3 ஜோடி இருந்தது. இந்தியன் 2வில் 3 அழகான ஹீரோயின் இருந்தும் ஜோடி இல்லையேனு வருத்தம் இல்லையா?’ என்று குறும்பு கேள்வி கேட்கப்பட, ‘‘என் ஜோடி ஒரு பெண்ணாக இருக்க வேண்டும் என்பது அல்ல. திருமணத்துடன் வாழ்க்கை முடிந்துவிடாது. ஒரு இளைஞன் என்பதுடன் முடியாது. இப்போது தாத்தா வர்றாரு என்கிறார்கள். நான் 35 வயதில் தாத்தா வேஷம் போட்டேன். எனக்கு வயோதிக பயம் இல்லை. இளவட்டங்கள் வர்றாங்களே, அவங்க மரத்தை சுத்தி ஆடுறாங்களேங்கிற பயம் எனக்கு இல்லை. ராமாஜனுரின் ஜோடி அந்த திருவரங்கம். நான் பக்தியும் பேசுவேன்’’ என்று சிரித்தார். மேலும்,‘‘ இந்த படத்துல எத்தனை பாட்டு, டான்ஸ் என்று கேட்கவில்லை. எத்தனை குத்து, எத்தனை செத்துனு கேட்டேன்’’ என்றார்.


இந்தியன் 2 படத்தில் சென்சார் போர்டு கெட்டவார்த்தைகளை நீக்கப்பட்ட கேள்விக்கு, ‘‘நான் சின்ன பிள்ளையாக இருந்தபோது, கெட்ட வார்த்தைகளில் கவிதை எழுதிட்டேன்னு வீட்டுக்கு புகார் வந்தது. என் அப்பாவை ஊரில் இருந்து அம்மா வர வழைச்சிட்டாங்க. என்னை வீட்டை விட்டு துரத்திடுவாங்களோனு பயந்தேன். ஆனால், என் அப்பா கெட்ட வார்த்தை  கவிதைகளை பார்த்துவிட்டு சந்தம், சீர் குறித்து பேசினார். அந்த மோசமான வார்த்தைள் குறித்த புகாருக்கு, நீ பேசாமல் டாக்டருக்கு படி, இந்த கெட்ட வார்த்தைகள் பாடமாக மாறிடும். இந்த உறுப்புகளை பற்றி அவங்க பேசுவாங்க என்றார். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. ஆண்கள் தங்களால் செய்ய முடியாத வேலையை பெண்கள் செய்கிறார்கள் என்பதற்காக, சில கெட்ட வார்த்தைகளை பேசுகிறார்கள். சென்சார் இந்த விஷயத்தில் மாற்றம் கொண்டு வர வேண்டும். நல்லது, கெட்டதை பக்கத்தில் வைத்தால்தான் உண்மை தெரியும். சென்சார் போர்டு தடுப்பதால் தெருவில் குழந்தைகள் கெட்ட வார்த்தைகளை கேட்காமல் இருப்பார்களா? கெட்ட வார்த்தைகளை அனுமதிக்க வேண்டும். வன்முறைகளை வலிக்கிற மாதிரி காண்பிக்க வேண்டும்’’ என்றார் அதிரடியாக


‘‘உங்கள் அரசியல் பயணத்துக்கு இந்தியன் 2 கருத்துகளை பயன்படுத்துவீங்களா?’’ என்ற கேள்விக்கு, ‘‘நான் மட்டுமல்ல, எந்த நேர்மையான அரசியல்வாதியும், இ்நத கருத்துகளை பயன்படுத்தலாம். அத்தனை நல்ல விஷயங்களை இந்த படம் பேசுகிறது என்று நச் பதில் அளித்தார். இந்த படத்துல கதாநாயகி இல்லை. இதுல பாரத மாதாதான் ஹீரோயின். அம்மா, மகன் கதையாக இருக்கும். அரசியல் புரிதல், உணர்வை இந்த படம் தரும். நல்ல யோசனையை அனைத்து கட்சிகளுக்கும் சொல்லும் விஷயம் இந்த கதையில் இருக்கிறது’’ என்றார். ‘‘இந்தியன் 3வில் ரொமான்ஸ் இருக்குமா’’ என்று கேட்டால், ‘‘என்னை ரொமான்ஸ் பண்ணக்கூடாது என்று சொல்லலாமா? பார்ட் 3 பேசக்கூடாது என்று இயக்குனர் சொல்லியிருக்கிறார். அந்த படத்தில் உங்க கே ள்விக்கு பதில் இருக்கிறது’’ என்றார்.


‘‘இன்றைக்கு நீட், கள்ளச்சாராயம் அழிக்க முடியாத விஷயமாக இருக்கிறதே’’ என்று கேள்விக்கு, ‘‘கள்ளச்சாராயம் குறித்து பல ஊடகங்களில் பேசியிருக்கிறேன். கள்ளச்சாராயம் உருவாக காரணமே, மதுவிலக்குதான். வள்ளுவரே மதுவிலக்கு பற்றி எழுதியிருக்கிறார்.விஷம் இது, நெருப்பு இது என்ற எண்ணம் பொதுவெளியில் வர வேண்டும். இது உடம்புக்கு கெடுதல் என அவனே முடிவு செய்ய வேண்டும். மதுவிலக்கு வந்தால் கள்ளச்சந்தை பெருகும், கள்வர்கள் பெருவார்கள்’’ என்றார். ‘‘உலக நாயகனை இப்ப தாத்தா என்கிறார்களே?’’ என்று கேள்விக்கு ‘‘இதெல்லாம் நீங்க பண்ணி வைக்கிற கோளாறு. நான் தாத்தா தானே, காந்தியை தாத்தா என்று சொல்வதாலும், பெரியாரை தாத்தா என்று சொல்வதாலும் குறைஞ்சு போயிட்டாரா, என்ன?. தாத்தாவாக இருக்க நாம் பயிற்சி எடுத்துகிட்டே இருக்கோம். நீங்களும் எடுக்கணும், ஒரு நாள் அது நடக்கும்’’ என்று காட்டமாக பதில் அளித்தார், ‘‘தயாரிப்பாளர் சங்கம் சில புகார் விஷயத்தில் உங்களுக்கு தடை விதித்து இருக்கிறதே?’ என்று கேட்கப்பட, ‘‘பக்கத்தில் அந்த கட்டடம் இருக்கிறது. அங்கே அது பற்றி பேசலாம். இது இந்தியன் 2 பிரஸ்மீட்’’ என பேட்டியை முடித்தார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow