Ajith: ரேஸ் காரில் சீறிப் பாய்ந்த அஜித்... 230 KM Speed!... ரசிகர்களுக்கு வைப் கொடுத்த வீடியோ!

அஜித் ரேஸ் கார் டிரைவ் செய்யும் புதிய வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Aug 29, 2024 - 03:33
Aug 29, 2024 - 15:49
 0
Ajith: ரேஸ் காரில் சீறிப் பாய்ந்த அஜித்... 230 KM Speed!... ரசிகர்களுக்கு வைப் கொடுத்த வீடியோ!
Ajith Viral Video

சென்னை: கோலிவுட்டின் உச்ச நடிகர்களில் ஒருவரான அஜித், விடாமுயற்சி, குட் பேட் அக்லி படங்களில் நடித்து வருகிறார். நீண்ட இடைவேளைக்குப் பின்னர் ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. மகிழ் திருமேனி இயக்கத்தில் லைகா நிறுவனம் தயாரிக்கும் விடாமுயற்சி திரைப்படம் நவம்பர் அல்லது டிசம்பர் இறுதியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் தான் முடிவடைந்ததாகவும், போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் முடிந்ததும் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் எனவும் சொல்லப்படுகிறது.

அதேபோல், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிக்கும் குட் பேட் அக்லி திரைப்படம் அடுத்தாண்டு பொங்கலுக்கு வெளியாகிறது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து வருகிறார். ஆனால், அஜித்துடன் நடிக்கும் நடிகர்கள், நடிகைகள் பற்றிய அறிவிப்புகள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை. அதேநேரம் அஜித் மூன்று வேடங்களில் நடிப்பதாகவும், அவருக்கு ஜோடியாக த்ரிஷா, மீனா ஆகியோர் கமிட்டாகியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒருபக்கம் விடாமுயற்சி, இன்னொரு பக்கம் குட் பேட் அக்லி என படுபிஸியாக காணப்படுகிறார் அஜித்.

இந்த பரபரப்புக்கு மத்தியிலும் மனுஷன் தனது பேஷனை விட்டுவிடவில்லை. ஆரம்பத்தில் பைக், கார் ரேஸ்களில் பங்கேற்று வந்த அஜித், தற்போது உலகம் முழுவதும் பைக் டூர் செல்வதில் ஆர்வம் காட்டி வருகிறார். இந்நிலையில், சில தினங்களுக்கு முன்னர் துபாயில் ரேஸ் கார் வாங்கி கெத்து காட்டினார் அஜித். அதோடு தொடர்ந்து ரேஸ் கார் ஓட்டும் பயிற்சியிலும் ஈடுபட்டு வந்தார். இதனால் அஜித் மீண்டும் கார் ரேஸ் போட்டிகளில் பங்கேற்பார் என ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர். 

இந்நிலையில், அஜித்தின் லேட்டஸ்ட் வீடியோ ஒன்று ரசிகர்களுக்கு செம வைப் கொடுத்துள்ளது. துபாய் சென்றுள்ள அஜித், அங்கு ரேஸ் கார் டிரைவிங் பயிற்சி எடுத்து வருவதாக தெரிகிறது. அப்போது அவர் 230 கிமீ வேகத்தில் ரேஸ் காரை ஓட்டி மாஸ் காட்டியுள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக, அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். கோலிவுட்டில் இப்படியொரு ஹீரோ இனி வரப்போவதில்லை எனவும், அவருக்காகவே Fast & Furious மாதிரி ஒரு படம் எடுக்கலாம் எனவும் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.

மேலும் படிக்க - ரஜினியின் கூலி படத்தில் இணைந்த செளபின் சாஹிர்

முன்னதாக அஜித் குறித்து யோகி பாபு பேசியதாக ஒரு கன்டெண்ட் சமூக வலைத்தளங்களில் வைரலானது. அதாவது, அஜித் ஒரு படப்பிடிப்பில் தன்னை தொடாதே என்பதாக யோகி பாபுவிடம் சொன்னதாக, வலைப்பேச்சு டீம் வீடியோ வெளியிட்டிருந்தது. இதற்கு மறுப்பு தெரிவிக்கும் விதமாக யோகி பாபு ட்வீட் செய்துள்ளார். அதில், அஜித் எடுத்த தனது புகைப்படத்தை பகிர்ந்துள்ள யோகி பாபு, இது தான் எனது ஃபேவரைட் போட்டோ என கேப்ஷன் கொடுத்துள்ளார். இது வலைப்பேச்சு டீம்க்கு யோகி பாபு கொடுத்த பதிலடியாக அமைந்துள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow