சுக்கிரன் பெயர்ச்சி பலன் 2024: கடகத்திற்கு இடம் மாறிய காதல் நாயகன் சுக்கிரன்.. ஜாக்பாட் யாருக்கு?

Sukran Peyarchi Palan 2024 : சுக்ரன் களத்திரகாரகன் இல்லற வாழ்வுக்குறியவர். சுக்கிரன் மிதுன ராசியில் இருந்து கடக ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைந்துள்ளார். கிரகங்களின் கூட்டணி, சஞ்சாரத்தை வைத்து ராசிக்காரர்களுக்கு நன்மையும் தீமையும் நடைபெறும். சுக்கிரன் பெயர்ச்சியால் மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கும் என்ன பலன் கிடைக்கும் யாருக்கு ஜாக்பாட் அடிக்கும் என பார்க்கலாம்.

Jul 10, 2024 - 14:27
Jul 10, 2024 - 14:39
 0
சுக்கிரன் பெயர்ச்சி பலன் 2024: கடகத்திற்கு இடம் மாறிய காதல் நாயகன் சுக்கிரன்.. ஜாக்பாட்  யாருக்கு?
Sukran Peyarchi Palan 2024

Sukran Peyarchi Palan 2024 : சுக்கிரன் சுக போகங்களின் அதிபதி.  சுக்ரன் மனைவி யோகம் தருபவர் ஆணுக்கு மனைவியைப்பற்றியும், பெண்ணுக்கு மண வாழ்க்கையைப் பற்றியும் சொல்லுகின்றவர். ஆகையால் சுக்கிரன் நமது ஜாதக கட்டத்தில் நல்ல யோக அம்சத்துடன் இருப்பது அவசியம்.  இவருடைய தசா காலமான 20 வருடங்களில் மிகப்பெரிய ராஜ யோக பலன்கள் உண்டாகும்.

சுக்கிரன் சிற்றின்பம், திருமணம் முதலான சுகத்தை ஆணுக்கு அளிப்பவர். அதே போல் பெண்களுக்கு நளினத் தன்மையையும் அழகான தோற்றம், கவர்ச்சி, வீரியசக்தி, அறிவாற்றல், மனத்துக்கிசைந்த கணவனை அடையும் தகுதியையும், சுக போகங்களில் திளைத்து மகிழும் ஆற்றலையும் வழங்குவார். சுக்ரன் என்றால் இன்பம். மனித வாழ்க்கையில் அன்பு, பாசம், காதல் ஆகிய மூன்று இன்பங்களை அளிக்கக் கூடியவர். 

மேஷம்

சுக்கிரன் உங்கள் ராசிக்கு 4வது வீட்டில் அமர்ந்து உள்ளதால் வீட்டுக்குத் தேவையான அலங்கார பொருட்களை வாங்கி குவிப்பீர்கள். சிலர் வீடுகளை பராமரிப்பு செய்வீர்கள். வண்டி வாகனம் வாங்கும் போது மட்டும் கவனமாக வாங்க வேண்டும் இல்லை எனில் செலவு இழுத்து விட்டு விடும். 

ரிஷபம்

ராசி நாயகன் சுக்கிரன் உங்கள் ராசிக்கு 3ஆம் இடமான முயற்சி ஸ்தானத்தில் அமர்ந்து உள்ளார். உங்களின் பேச்சுத்திறமையும், அழகியலும் அதிகரிக்கும். உங்கள் நட்பு வட்டம் அதிகரிக்கும்.   சிறு ஆன்மீகப் பயணம் செல்ல வேண்டியிருக்கும். உடல் நலனில் சின்னச் சின்ன பாதிப்பு  ஏற்படும். வெள்ளிக்கிழமை மகாலட்சுமி தாயாரை விளக்கேற்றி வழிபட நன்மைகள் நடக்கும்.

மிதுனம்

உங்கள் ராசியில் பயணம் செய்து வந்த சுக்கிரன் உங்கள் ராசிக்கு 2வது வீட்டில் பயணம் செய்வதால் வருமானம் அதிகாிக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். கணவன் மனைவிக்கு இடையே காதல் உணர்வுகள் அதிகரிக்கும்.

கடகம்

காதல் நாயகன் சுக்கிரன் உங்கள் ராசியில் பயணம் செய்வதால் நல்ல வருமானம் வரும். பொன்னும் பொருளும் சேரும் நேரம் இது. தங்க நகைகள் வாங்கலாம். ஆடம்பரமான பொருட்களை வாங்குவதால் சுப செலவுகள் ஏற்படும். கணவன் மனைவி இடையே நெருக்கம் அதிகரிக்கும்.  

சிம்மம்

உங்கள் ராசிக்கு விரைய ஸ்தானமான12வது வீட்டில் சுக்கிரன் பயணம் செய்வதால் சுப விரைய  செலவு ஏற்படும். டிவி பிாிட்ஜ் ஏசி பொருட்கள் வாங்கலாம்.  வாழ்க்கை துணையுடன் அந்நியோன்னியம் அதிகரிக்கும். பணவரவு சிலருக்கு உற்சாகத்தை தரும். பணம் வரும் போது பத்திரப்படுத்துங்கள். 

கன்னி

சுக்கிரன் உங்கள் ராசிக்கு 11வது வீடான லாப ஸ்தானத்தில் பயணம் செய்வதால் குடும்ப வாழ்க்கையில் உற்சாகமடையும் வகையில் பல செயல்கள் நடைபெறும் மாதம் இது. பண வருமானம் அதிகாிக்கும். பிள்ளைகள் வழியில் சிறப்பான பலன்களை எதிா்பாா்க்கலாம். வீடு நிலம் வகையில் ஆதாயம் கிடைக்கும். அரசனுக்கு இணையான வாழ்க்கை கிடைக்கும் காலமாகும். வாகன வசதி மேம்படும். சிலருக்கு குழந்தை பாக்கியம் ஏற்படும்.

துலாம்

உங்கள் ராசிக்கு 10வது வீட்டில்  தொழில் ஸ்தானத்தில் பயணம் செய்வதால் உங்கள் வேலையில், தொழிலில் உற்சாகத்தை ஏற்படுத்தும். பணி செய்யும் இடத்தில் வார்த்தைகளில் கவனம் தேவை. அமைதியாக நிதானமாக பேசவும். குடும்பத்தில் மனைவியுடனே அல்லது காதலியுடனே சின்னச் சின்ன ஊடல் ஏற்படலாம் சமாளியுங்கள்.

விருச்சிகம்

ராசிக்கு 9ஆவது வீட்டில் சுக்கிரன் பயணம் செய்கிறார். உங்களுக்கு மனைவியின் அன்பான ஆதரவு கிடைக்கும். காதலி நண்பர்கள், உறவினர்களுடன் உற்சாகமாக இருக்கும் காலம் இது. காதலிப்பவர்களுக்கு இந்த மாதம் குதூகலமாக அமையும். வெளிநாடு செல்லும் யோகம் கைகூடி வருகிறது. பாஸ்போர்ட் எடுத்தவர்கள் வெளிநாடு செல்ல விசாவிற்கு முயற்சி செய்யலாம்.

தனுசு

சுக்கிரன்  எட்டாவது வீட்டில் மறைகிறார். அவசரப்பட வேண்டாம். நிதானத்தை கையாளுங்கள்.  கவனமாக இல்லாவிட்டால் மருத்துவ செலவுகள் எற்படும். பணத்தை பத்திரப்படுத்துங்கள் விலை உயர்ந்த நகைகளை யாருக்கும் இரவல் கொடுக்க வேண்டாம். 

மகரம்

காதல் நாயகன் சுக்கிரன் உங்கள் ராசிக்கு 7ஆம் இடத்தில்  களத்திர ஸ்தானத்தில்  பயணம் செய்கிறார். சுக்கிரன் பார்வை உங்கள் ராசிக்கு கிடைப்பதால் சிலருக்கு காதல் கணிந்து திருமணத்திலும் முடிய வாய்ப்பு உள்ளது. உணவு விசயத்தில் கவனம் தேவை. சிறிய அளவில் உடல்நலக்குறைவு ஏற்படும். பெண்கள் விசயத்தில் சற்று கவனமாக இருக்கவும். இல்லை எனில் மதிப்பு மரியாதைக்கு பிரச்சினை ஏற்பட்டு விடும். 

கும்பம்

சுக்கிரன் உங்கள் ராசிக்கு 6வது இடத்தில் மறைவதால் வீட்டில் வாழ்க்கைத்துணையினால் சின்னச்சின்ன சச்சரவுகள், ஊடல்கள் ஏற்பட்டு அதனால் சிலருக்கு மன அழுத்தம் ஏற்படும். வேலை பார்க்கும் இடத்தில் வேலைப்பளு அதிகரிக்கும். உங்கள் உடல் நலனையும் பாக்கெட்டில் உள்ள பணத்தையும் பத்திரமாக பார்த்துக்கொள்ளவது அவசியம். கவலைகள், சங்கடங்கள் சூழும் காலம் என்பதால் ஸ்படிக மாலை அணிந்து கொள்வது நல்லது.  

மீனம்

காதல் நாயகன் சுக்கிரன் உங்கள் ராசிக்கு 5ஆம் வீட்டில் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். பல வழிகளிலும் பணம் வரும். உங்களுக்கு கற்பனை வளமும் அழகுணர்ச்சியும் அதிகரிக்கும்.வீட்டில் மனைவி, குழந்தைகள் மீது அன்பும் பாசமும் அதிகரிக்கும். வாழ்க்கைத் துணைவர் உங்கள் மீது காதல் மழை பொழியும் நேரமிது. ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow