மயிலாடுதுறை மாவட்டத்தில் திடீர் நில அதிர்வு.. காரணம் என்ன? அச்சத்தில் மக்கள்!

மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் திடீர் நில அதிர்வு உணரப்பட்டுள்ளது. லேசான சத்தத்துடன் நில அதிர்வு ஏற்பட்டதால் பொதுமக்கள் அச்சமடைந்தனர்.

Jul 2, 2024 - 10:40
Jul 2, 2024 - 11:45
 0
மயிலாடுதுறை மாவட்டத்தில் திடீர் நில அதிர்வு.. காரணம் என்ன? அச்சத்தில் மக்கள்!
Mayiladuthurai Earthquake

மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த 2021ஆம் ஆண்டு பயங்கர வெடிச்சத்தத்துடன் சீர்காழி, தரங்கம்பாடி, பூம்புகார், கொள்ளிடத்தில் நிலஅதிர்வு ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. காரைக்கால் பகுதியிலும் வெடிச்சத்தமும் நில அதிர்வும் உணரப்பட்டுள்ளதாக மக்கள் கூறியுள்ளனர். வெடிச்சத்தம் ஏற்பட ராணுவ விமானமே காரணம் என அதிகாரிகள் தெரிவித்தனர். 

இந்த நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் நேற்று முதல் ஜெட் விமானம் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று காலை 10 மணி அளவில் பல்வேறு இடங்களில் லேசான சத்தத்துடன் நில அதிர்வு ஏற்பட்டதாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் மக்கள் அச்சம் தெரிவித்தனர்.

இதுகுறித்து வல்லுனர்களிடம் கேட்டபோது ஜெட் விமானம் தாழ்வாக பறக்கும் போது சில நேரங்களில் காற்றின் அலை காரணமாக சிறிய சத்தத்துடன் கூடிய நில அதிர்வு ஏற்படுவது இயல்புதான் என தெரிவித்தனர். இது குறித்து காவல்துறையினரிடம் கேட்டபோது இது வழக்கமான சோதனை ஓட்டம் தான். அச்சப்படத் தேவையில்லை என தெரிவித்தனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow