ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்து.. உதவி எண் அறிவிப்பு..

Howrah Mumbai Express Derailed at Jharkhand : மும்பை - ஹவுரா இடையிலான விரைவு ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் 6 பேர் படுகாயம் அடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Jul 30, 2024 - 13:29
Jul 30, 2024 - 23:50
 0
ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்து.. உதவி எண் அறிவிப்பு..
Howrah Mumbai Express Derailed at Jharkhand

Howrah Mumbai Express Derailed at Jharkhand : மும்பை - ஹவுரா இடையிலான விரைவு ரயில் [வண்டி எண்: 12810] ஜார்கண்ட் மாநிலம் சக்ரதர்பூர் அருகே சென்றுகொண்டிருந்தபோது காலை 03.43 மணியளவில் எதிர்பாராத விதமாக, தடம் புரண்டது [Train Derails]. அதில், 6 பயணிகளுக்கு லேசாக காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ரயில்வே துறை தகவலின் படி இந்த விபத்தில், 14 பெட்டிகள் தடம் புரண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர் திசையில் இருந்து வந்த சரக்கு ரயில் தடம் புரண்டு பயணிகள் ரயிலின் மீது மோதியதால் தடம் புரண்டதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. காயமடைந்த பயணிகள் அனைவருக்கும் உடனடியாக முதலுதவி அளிக்கப்பட்டது.

மேலும், விபத்து குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதற்கிடையில், உறவினர்கள் மற்றும் பயணிகளுக்கான உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
மும்பை உதவி எண்: 022-22694040
நாக்பூர் உதவி எண்: 7757912790
புசாவல் உதவி எண்: 08799982712.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow