பாட்டில் குடிநீர் ரொம்ப ஆபத்து! இனி கடைகளில் தண்ணீர் வாங்கி குடிக்கலாமா?

ஆபத்தான உணவு பிரிவில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் பாட்டிலை சேர்த்துள்ளது இந்திய உணவு பாதுகாப்பு ஆணையம். இனி கடைகளில் தண்ணீர் வாங்கி குடிக்கலாமா? உணவு பாதுகாப்பு ஆணையம் சொல்வது என்ன? பார்க்கலாம் இந்த தொகுப்பில்...

Dec 9, 2024 - 17:47
 0
பாட்டில் குடிநீர் ரொம்ப ஆபத்து! இனி கடைகளில் தண்ணீர் வாங்கி குடிக்கலாமா?

நீரின்றி அமையாது உலகு... குறளுக்கேற்ப இந்த உலகம் 70 சதவீதம் நீர்நிலைகளால் சூழப்பட்டதே. இதில் குடிப்பதற்கான நீர் குறைவு என்றாலும், இன்றளவும் நமக்கு நண்ணீரை வழங்கிவருகிறது இயற்கை. பொதுவாக நமக்கு இருக்கும் உடல்நல பிரச்சனைகளுக்கு ’ நிறைய தண்ணி குடிங்க’ என மருத்துவர்கள் அறிவுரை வழங்குவர். இதனால், எங்கு சென்றாலும் தண்ணீர் பாட்டிலை உடன் சுமந்து செல்வதும், மறந்துவிட்டால் கடையில் தண்ணீரை வாங்கி அருந்துவதும் என நாம் இருப்போம். அதிலும் இந்த சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் பாட்டில்களில் பல தனித்துவமான விஷயங்கள் உள்ளன. குறிப்பாக இந்த பாட்டிலின் மூடிகள் வெவ்வேறு நிறங்களில் இருப்பதை நீங்கள் கவனித்திருக்ககூடும்.

வெள்ளை நிற மூடி இருந்தால் பாட்டிலில் உள்ள நீர் பதப்படுத்தப்பட்டுள்ளது என அர்த்தம். அதுவே கருப்பு நிற மூடுயாக இருந்தால், ஆல்கலைன் சேர்க்கப்பட்ட நீர் என்று அர்த்தம். இதில் இருக்கும் பிஎச் லெவல் நம் உடலில் இருப்பதை விட அதிகமாக இருக்குமாம். அதுவே, நீல நிற முடி இருந்தால், நீரூற்றுகளில் இருந்து சேகரிக்கப்பட்ட தண்ணீர் என்றும், அதுவே பச்சை நிறத்தில் பாட்டிலின் மூடி இருந்தால், தண்ணீரில் சில சுவைகள் சேர்க்கப்பட்டுள்ளது என்றும் அர்த்தமாம். இதனால் இந்தியாவில் இருக்கும் பெரும்பாலான மக்கள் தாகத்திற்காக தண்ணீர் குடிப்பதையும் தாண்டி சிலர் தங்கள் உடல்நலத்தின் தேவைக்கேற்ப தண்ணீரை அதிக விலைக்கு வாங்கி குடிப்பதும் வாடிக்கையாக இருந்து வருகிறது.

அப்படிப்பட்ட அத்தியாவசமான தண்ணீரையே ஆபத்தான உணவு என்ற பிரிவில் இணைத்துள்ளது இந்திய உணவு பாதுகாப்பு ஆணையம்.

அதாவது சுத்திகரிக்கப்பட்டு பாட்டிலில் விற்பனையாகும்  குடிநீரை ’அதிக ஆபத்துள்ள உணவு’ பிரிவில் சேர்த்துள்ளது   இந்திய உணவு பாதுகாப்பு ஆணையம். இதுகுறித்து  இந்திய உணவு பாதுகாப்பு ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், அதிக ஆபத்துள்ள உணவு பிரிவாக மறுவகைப்படுத்தப்பட்டுள்ளது. இதனால், ஒழுங்குமுறை கட்டுப்பாடுகள் மற்றும் ஆண்டுதோறும் சுத்திகரிப்பு ஆலைகளில் ஆய்வுகள் கட்டாயமாக்கப்பட்டுள்ளன" என தெரிவித்துள்ளது.

மேலும், இந்திய உணவு பாதுகாப்பு ஆணையத்தின் படி, ‘அதிக ஆபத்தான உணவு’ என்றால் அதை பொதுமக்கள் அருந்தக்கூடாது என்பது அர்த்தமில்லையாம். அப்படி வகைபடுத்தப்பட்ட உணவுகளை இன்னும் அதிக கட்டுப்பாடு மற்றும் தர ஆய்வுகளுக்கு உட்படுத்த வேண்டும் என்பதே இதன் பொருள் என தெரியவந்துள்ளது. இதனால் கடைகளில் கிடைக்கும் தண்ணீர் பாட்டில்களை மக்கள் அச்சமில்லாமல் வாங்கி பருகலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.. ஆனால், மக்கள் அதிகம் வாங்கி பருகும் அத்தியாவசியமான பொருளான தண்ணீர் பாட்டில்கள்  இவ்வளவு நாள் முறையான ஆய்வுகள் நடத்தப்படாமல் தான் விற்பனையாகிறதா என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow