Amaran Box Office Collection: பாக்ஸ் ஆபிஸில் மிரட்டும் அமரன்... முதல் நாள் வசூல் இத்தனை கோடியா..?
சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடித்துள்ள அமரன் திரைப்படம் தீபாவளி ஸ்பெஷலாக நேற்று ரிலீஸானது. ரசிகர்களிடம் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ள இந்தப் படத்தின் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.
சென்னை: ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடித்துள்ள அமரன் திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் ரிலீஸானது. கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ள இந்தப் படம், வீரமரணம் அடைந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் பயோபிக்காக உருவாகியுள்ளது. சிவகார்த்திகேயன் முதன்முதலாக ஆர்மி ஆபிஸராக நடித்துள்ளதால் அமரன் படத்துக்கு அதிக எதிர்பார்ப்பு இருந்தது. இந்நிலையில், உலகம் முழுவதும் 3500க்கும் அதிகமான திரையரங்குகளில் ரிலீஸான அமரன், பாசிட்டிவான விமர்சனங்களுடன் பாக்ஸ் ஆபிஸ் வசூலிலும் மாஸ் காட்டி வருகிறது.
இந்தாண்டு தமிழில் வெளியான படங்களில் விஜய்யின் கோட், பாக்ஸ் ஆபிஸில் 400 கோடிக்கும் அதிகமாக வசூலித்திருந்தது. இந்தப் படத்துக்கு ஆன்லைனில் முதல் நாளில் 584K டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டன சாதனையாக இருந்தது. கடந்த மாதம் 10ம் தேதி வெளியான சூப்பர் ஸ்டார் ரஜினியின் வேட்டையன் திரைப்படம், 470K டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டன. இந்நிலையில், சிவகார்த்திகேயனின் அமரன் திரைப்படம், ரஜினியின் வேட்டையனை பின்னுக்குத் தள்ளி இரண்டாவது இடம் பிடித்துள்ளது.
அதன்படி அமரன் படத்துக்கு முதல் நாளில், 478K டிக்கெட்டுகள் விற்பனையாகியுள்ளன. கமலின் இந்தியன் 2 படத்துக்கு 403K டிக்கெட்டுகள் புக் ஆகியிருந்தது. அதேபோல், தனுஷின் ராயன் 273K, சீயான் விக்ரமின் தங்கலான் 198K டிக்கெட்டுகள் இணையத்தில் முன்பதிவு செய்யப்பட்டிருந்தன. இதையெல்லாம் சிவகார்த்திகேயனின் அமரன் திரைப்படம் ஓவர்டேக் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. அமரன் படத்துக்கு முதல் நாளில் பாசிட்டிவான விமர்சனம் கிடைத்துள்ளதால், அடுத்தடுத்த நாட்களுக்கும் டிக்கெட்கள் விற்றுத் தீர்ந்துவிட்டன.
அமரனுக்குப் போட்டியாக வெளியான லக்கி பாஸ்கர் படத்துக்கு மட்டுமே பாசிட்டிவான விமர்சனம் கிடைத்துள்ளது. கவினின் ப்ளடி பெக்கர், ஜெயம் ரவி நடிப்பில் வெளியான பிரதர் படங்களுக்கு எதிர்பார்த்தளவில் வரவேற்பு இல்லை. இதனால், சூர்யாவின் கங்குவா ரிலீஸாகும் வரை, சிவகார்த்திகேயனின் அமரன் திரைப்படம் மாஸ் காட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், அமரன் படத்தின் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன. பாக்ஸ் ஆபிஸ் வட்டாரத்தின் தகவல் படி, அமரன் முதல் நாளில் உலகம் முழுவதும் 35 கோடி ரூபாய் வரை வசூல் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.
தமிழ்நாட்டில் 20 கோடி வரை கலெக்ஷன் செய்துள்ள அமரன், மற்ற மாநிலங்களில் 5 கோடி வசூலித்துள்ளதாம். ஒட்டுமொத்தமாக உலகம் முழுவதும் 35 கோடி ரூபாய் கலெக்ஷன் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வெள்ளிக்கிழமையான இன்று முதல் மேலும் இரண்டு நாட்கள் வார விடுமுறை உள்ளது. இதனால் இந்த வாரம் முடிவுக்குள்ளாக அமரன் 100 கோடி பாக்ஸ் ஆபிஸ் கிளப்பில் இணைந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. சிவகார்த்திகேயன் நடிப்பில் இந்தாண்டு பொங்கலுக்கு வெளியான அயலான் எதிர்பார்த்தளவில் வெற்றிப் பெறவில்லை. அதற்கு கம்பேக் கொடுக்கும் விதமாக அமரன் சூப்பர் ஹிட் அடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
What's Your Reaction?