ரயில் டிக்கெட் முன்பதிவில் அதிரடி மாற்றம்.. இன்று முதல் அமல்...
ரயில் டிக்கெட் முன்பதிவு செய்வது தொடர்பான புதிய விதிகள் இன்று முதல் அமலுக்கு வருவதாக ரயில்வே துறை அறிவித்துள்ளது.
விரைவு ரயில்களில் பயணம் செய்வதற்காக 120 நாட்களுக்கு முன்னதாக முன்பதிவு செய்ய வேண்டும் என்ற விதிமுறை இருந்து வந்தது. இந்த முறையில் ரயில் டிக்கெட்டை IRCTC இணையதளம் மற்றும் ரயில்வே கவுன்டர்கள் மூலம் முன்பதிவு செய்து மக்கள் பயணித்து வருகின்றனர். இந்த நிலையில், ரயில் டிக்கெட் முன்பதிவு செய்தவதற்கான கால வரம்பு 120 நாளில் இருந்து 60 நாட்களாக குறைக்கப்பட இருப்பதாக ரயில்வே துறை சமீபத்தில் அறிவிப்பை வெளியிட்டது. இந்த புதிய விதி இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. ஆயினும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் ஓராண்டுக்கு முன்னதாக முன்பதிவு செய்யும் வசதியில் எவ்வித மாற்றமும் இருக்காது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
What's Your Reaction?