இதயநோய்.. தோல் நோயை குணமாக்கும் செம்பருத்திபூ.. கண்ணுக்கு குளிர்ச்சி தரும்

Sembaruthi Poo Health Benefits in Tamil : செம்பருத்திப்பூக்களுடன் ஆவாரம்பூ, பாசிப்பயறு, கறிவேப்பிலை சேர்த்துப்பொடியாக்கி சோப்புக்குப் பதிலாக தலை முதல் கால் வரை பூசிக் குளிக்க தோல் நோய் கட்டுப்படும்.

Jul 22, 2024 - 18:05
Jul 22, 2024 - 18:31
 0
இதயநோய்.. தோல் நோயை குணமாக்கும் செம்பருத்திபூ.. கண்ணுக்கு குளிர்ச்சி தரும்
Sembaruthi Poo Health Benefits in Tamil

Sembaruthi Poo Health Benefits in Tamil : செம்பருத்தி பூக்கள்(Hibiscus Flower) அழகுக்காக மட்டுமல்ல ஆரோக்கிய ரீதியாகவும் மனிதர்களுக்கு நன்மை அளிக்கிறது. ஆரோக்கியமான தலைமுடியை பராமரிக்க செம்பருத்திப்பூக்களை தேங்காய் எண்ணெய் உடன் கலந்து நாம் பயன்படுத்தலாம். அதே போல இதயநோய் பிரச்சினைகளுக்கும் அருமருந்தாக திகழ்கிறது.

இதயநோய்க்கு செம்பருத்திப்பூ நல்லதொரு மருந்தாகப் பயன்படுகிறது. காலை எழுந்ததும் வெறும் வயிற்றில் இந்த பூக்களின் இதழ்களை மென்று தின்று வந்தால் காலப்போக்கில் இதய நோய் குணமாகும். வெறுமனே சாப்பிட பிடிக்காதவர்கள், செம்பருத்திப்பூவை ஜூஸ் செய்து குடிக்கலாம். 

4-5 செம்பருத்திப்பூக்களின் இதழ்களை எடுத்துக்கொண்டு அதனுடன் விதை நீக்கப்பட்ட ஒரு நெல்லிக்காய், இரண்டு கொத்து கறிவேப்பிலை, தோல் நீக்கிய இஞ்சித்துண்டு சிறிது சேர்த்து மையாக அரைத்து வடிகட்டிக்கொள்ள வேண்டும். இதில் தேன், நாட்டுச் சர்க்கரை சேர்த்து சாப்பிட இதய நோய் குணமாகும். 

செம்பருத்திப்பூக்கள் வெறும் இதய நோய் என்றில்லாமல், அவர்களுக்கு வரக்கூடிய படபடப்பு, வலி, ரத்தக்குழாய் அடைப்பு என்று அத்தனை பிரச்னைகளில் இருந்தும் நிவாரணம் தரக்கூடியது. செம்பருத்திப்பூக்களை சிகைக்காய்ப் பொடியுடன் சேர்த்துப் பயன்படுத்துவதால் பொடுகு, முடி உதிர்தல், இளநரை போன்ற பிரச்னைகள் சரியாகும். 

சிலர் காயவைத்த செம்பருத்திப்பூக்களுடன் ஆவாரம்பூ, பாசிப்பயறு, கறிவேப்பிலை சேர்த்துப்பொடியாக்கி சோப்புக்குப் பதிலாக தலை முதல் கால் வரை பூசிக் குளிப்பார்கள். இதனால் தோல் நோய்களில் இருந்து விடுபடுவதோடு, நோய் வராமலும் காத்துக்கொள்ளலாம்.

நரைமுடி, பொடுகுத்தொல்லை, முடி உதிர்தல் போன்ற பிரச்னைகள் தீர செம்பருத்திப்பூக்களுடன் இதன் இலைகள், கறிவேப்பிலை, மருதாணி இலை போன்றவற்றைச்சேர்த்து மையாக அரைத்து தலையில் தேய்த்து அரை மணி நேரம் கழித்து குளிக்க வேண்டும். இதை வாரம் ஒன்று அல்லது இரண்டு நாட்கள் செய்து வந்தால் நாளடைவில் பிரச்னைகள் தீரும். இது கண், உடலுக்கு குளிர்ச்சியைத் தந்து சூட்டினால் வரக்கூடிய நோய்களில் இருந்தும் காத்துக்கொள்ளலாம். 

செம்பருத்தி செடி இலையை வெறுமனே அரைத்து தலையில் தேய்த்துக் குளித்து வந்தால் முடி பட்டுப்போன்று மென்மையாக மாறும். ஷாம்புகளை தலையில் தேய்த்து பக்க விளைவுகளால் அவதிப்படுவோர் அதுக்கு மாற்றாக செம்பருத்தியைப் பயன்படுத்தலாம்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow