சினிமா

Raayan: ராயன் படத்துல ரஜினிகாந்த்... ஒரே வார்த்தையில் உண்மையை சொன்ன தனுஷ்... மிஸ் ஆகிடுச்சே!

தனுஷ் இயக்கி நடித்துள்ள ராயன் இந்த வாரம் 26ம் தேதி வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. அப்போது “ராயன் படத்தில் ரஜினி” என தனுஷ் சொன்ன ஒரு அப்டேட் ரசிகர்களுக்கு கூஸ்பம்ஸ்ஸாக அமைந்தது.

Raayan: ராயன் படத்துல ரஜினிகாந்த்... ஒரே வார்த்தையில் உண்மையை சொன்ன தனுஷ்... மிஸ் ஆகிடுச்சே!
Raayan Update
சென்னை: தனுஷின் 50வது படமாக உருவாகியுள்ள ராயனை அவரே இயக்கி நடித்துள்ளார். பவர் பாண்டி படத்துக்குப் பின்னர் ராயன் மூலம் மீண்டும் இயக்குநர் அவதாரம் எடுத்துள்ளார் தனுஷ். இந்த முறை வடசென்னையை பின்னணியாக வைத்து கேங்ஸ்டர் ஜானரில் மிரட்டவுள்ளது கன்ஃபார்மாகிவிட்டது. தனுஷுடன் எஸ்ஜே சூர்யா, பிரகாஷ்ராஜ், காளிதாஸ் ஜெயராம், சந்தீப் கிஷன், செல்வராகவன், துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். அதேபோல் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள ராயன் படத்துக்கு ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
 
மிரட்டலான காம்போவில் உருவாகியுள்ள ராயன் தெறி மாஸ்ஸாக இருக்கும் என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கொரியன் மூவி ஸ்டைலில் ராவான ஒரு கேங்ஸ்டர் ஜானர் படமாக ராயன் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏஆர் ரஹ்மான் இசையில் ராயன் படத்தின் பாடல்கள் அனைத்தும் ரசிகர்களின் லூப் மோடில் உள்ளன. அதேபோல் ராயன் ட்ரெய்லரும் படம் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. இந்நிலையில் ராயன் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தனுஷ், ரஜினி குறித்து பேசியிருந்தது வைரலாகி வருகிறது.
 
சூப்பர் ஸ்டார் ரஜினியின் மூத்த மகளான ஐஸ்வர்யாவை காதலித்து திருமணம் செய்த தனுஷ், தற்போது பிரிந்து வாழ்கிறார். இருவருமே பரஸ்பரமாக விவாகரத்துப் பெற்று பிரிந்துவிட்டனர். ஆனாலும் ரஜினியின் படங்கள் வெளியாகும் போது முதல் ஆளாக டிவீட் போட்டு வாழ்த்து சொல்லிவிடுவார் தனுஷ். அதுமட்டும் இல்லாமல் FDFS பார்த்துவிடுவதும் தனுஷின் வழக்கம். அதேபோல் ரஜினியின் பிறந்தநாளுக்கும் ஆண்டுதோறும் வாழ்த்து கூறிவிடுவார். இந்நிலையில் ராயன் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் “இப்படத்தில் நீங்கள் ஹீரோவாக நடிக்கவில்லை என்றால், வேறு யாரை அந்த கேரக்டரில் நடிக்க வைத்திருப்பீர்கள்” என காளிதாஸ் ஜெயராம் கேள்வி எழுப்பினார்.

அதற்கு கொஞ்சம் கூட யோசிக்காமல் உடனே ‘ரஜினிகாந்த் சார்’ தான் என தனுஷ் சொன்னதும், அரங்கமே அதிர்ந்தது. இதனால் ராயன் படத்தின் கதை, ரஜினியை மனதில் வைத்து எழுதப்பட்டது தானா என ரசிகர்களிடம் விவாதமே நடைபெற்று வருகிறது. ராயன் ட்ரெய்லரின் இறுதியில் பாட்ஷா ஸ்டைலில் ஒரு சீன் வைத்திருந்தார் தனுஷ். பாட்ஷா படத்தில் தனது தங்கைக்கு மெடிக்கல் சீட் வாங்கும் போது, ‘உண்மையை சொன்னேன்’ என டயலாக் பேசியிருப்பார் ரஜினி. அதேபோல், ராயன் படத்திலும் தனுஷ் அவரது ஸ்டைலில் பஞ்ச் வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
 
இதனிடையே ராயன் இசை வெளியீட்டு விழாவில் பேசியிருந்த தனுஷ், போயஸ்கார்டனில் வீடு கட்டியது பற்றியும் ஓபனாக கூறியிருந்தார். அதாவது ரஜினி, மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா இருவரது வீட்டையும் பார்த்து தான் போயஸ்கார்டனில் வீடு வாங்க வேண்டும் என தனது 16 வயதில் ஆசைப்பட்டேன். அது தற்போது சாத்தியமாகியுள்ளது என தனுஷ் கூறியிருந்தார்.