சவுக்கு சங்கர் புகார் – விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றம்

யூடியூபர் சவுக்கு சங்கர், தனது பேட்டியில், சென்னை பெருநகர காவல்துறையினரையும், காவல் ஆணையரையும் குறித்து சில குற்றச்சாட்டுகளை முன்வைத்ததாக தகவல் வெளியாகியுள்ளது. 

Mar 24, 2025 - 21:50
Mar 24, 2025 - 21:50
 0
சவுக்கு சங்கர் புகார் – விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றம்

சவுக்கு சங்கர் வீட்டில் நடந்த தாக்குதல் தொடர்பான புகார் அடிப்படையிலான விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றம் செய்து தமிழக டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.

சவுக்கு சங்கர் வீட்டின் மீது  தாக்குதல்

தனது  வீட்டில் நடந்த தாக்குதல் சம்பவத்திற்கு எதிராக கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் கொடுக்க யூடியூபர் சவுக்கு சங்கர் கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்திற்கு வருகை தந்திருந்தார். காவல் நிலையத்தில் புகாரை கொடுத்த பின் செய்தியாளர்களை சந்தித்த யூடியூபர் சவுக்கு சங்கர், “சவுக்கு மீடியா ஊடகத்தில் தொடர்ந்து சில ஆண்டுகளாக தமிழக அரசில் நடைபெற்று வரும் ஊழல்களையும் நிர்வாக சீர்கேடுகளையும் பதிவு செய்து வருகிறோம். துப்புரவு தொழிலாளர்களுக்கு கழிவுநீர் வெளியேற்றும் வாகனம் வழங்குவதில் மிகப்பெரிய ஊழல் முறைகேடு நடந்துள்ளது.

காவல்துறை நினைத்திருந்தால் என் வீட்டின் மீது நடந்த தாக்குதலை தடுத்திருக்க முடியும். காங்கிரஸ் கமிட்டியை சேர்ந்த வழக்கறிஞர் 50க்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்களை ஊர்வலமாக அழைத்து வந்து என் வீட்டில் தாக்குதல் சம்பவம் நடத்துகிறார். ஆனால்  எதுவும் தெரியாமல் உளவுத்துறை இருக்கிறதா? தாக்குதல் நடந்ததால் கீழ்பாக்கம் வீட்டின் உரிமையாளர் என்னை வீட்டை காலி செய்யும்படி கூறுகிறார்.தாக்குதல் நடந்த போது நான் வீட்டில் இருந்து இருந்தால் என் உயிருக்கு ஆபத்தை ஏற்பட்டிருக்கும் என தெரிவித்திருந்தார்.

தமிழக டிஜிபி உத்தரவு

இந்த நிலையில் சவுக்கு சங்கர் புகார் அளித்திருந்த நிலையில் விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றி தமிழக டிஜிபி உத்தரவிட்டுள்ளார். இது குறித்து தமிழக காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “ சென்னை, கீழ்ப்பாக்கம், தாமோதரமூர்த்தி தெரு என்ற முகவரியில் வசித்து வரும் கமலா, (68) என்பவர் இன்று (24.03.2025) காலை 09.45 மணி அளவில், சுமார் 20 பேர் கொண்ட ஒரு கூட்டத்தினர் அவரது வீட்டிற்குள் நுழைந்து, அவரை அவதூறாக பேசியதோடு. கழிவு நீரை வீசி வீட்டை மாசுபடுத்தி, தனக்கு அச்சுறுத்தல் விடுத்ததாக கூறி  கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.  

Read more: “என் வீட்டில் ஊற்றப்பட்டது அல்ல மலம்...தமிழக அரசின் மீது ஊற்றப்பட்டது”- யூடியூபர் சவுக்கு சங்கர் கடும் விமர்சனம்

இச்சம்பவத்திற்கு நடவடிக்கை எடுக்குமாறு கூறியுள்ளார். இந்த புகார் தொடர்பாக கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் சிஎஸ்ஆர் மனு பதிவுசெய்து விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இந்நிலையில், புகார்தாரர் கமலா என்பவரது மகன் யூடியூபர் சவுக்கு சங்கர், தனது பேட்டியில், சென்னை பெருநகர காவல்துறையினரையும், காவல் ஆணையரையும் குறித்து சில குற்றச்சாட்டுகளை முன்வைத்ததாக தகவல் வெளியாகியுள்ளது. 

சிபிசிஐடிக்கு மாற்றம்

இதனைத் தொடர்ந்து, சென்னை பெருநகர காவல் ஆணையர் தனது வேண்டுதலில்  மனு விசாரணையை மற்றொரு விசார அமைப்புக்கு மாற்றுமாறு பரிந்துரை செய்தார். இதன் அடிப்படையில், மேற்கண்ட காவல் நிலைய C.S.R. No.118/2025 5 விசாரணைக்காக CBCID (குற்றப்பிரிவு குற்றப் புலனாய்வுத் துறைக்கு) மாற்றம் செய்து டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்” . இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow