“என் வீட்டில் ஊற்றப்பட்டது அல்ல மலம்...தமிழக அரசின் மீது ஊற்றப்பட்டது”- யூடியூபர் சவுக்கு சங்கர் கடும் விமர்சனம்

என் வீட்டில் நடந்த தாக்குதலின் பின்புலத்தில் காவல்துறை உள்ளதாக நான் சந்தேகம் கொள்கிறேன்.

Mar 24, 2025 - 20:48
Mar 25, 2025 - 10:23
 0
 “என் வீட்டில் ஊற்றப்பட்டது அல்ல மலம்...தமிழக அரசின் மீது ஊற்றப்பட்டது”- யூடியூபர் சவுக்கு சங்கர் கடும் விமர்சனம்

என் வீட்டில் ஊற்றப்பட்ட மலம், என் வீட்டில் ஊற்றப்பட்ட மலம் அல்ல, தமிழக அரசின் மீதும், தமிழக அரசின் சட்டம் ஒழுங்கு மீதும் ஊற்றப்பட்ட மலம் என யூடியூபர் சவுக்கு சங்கர் கட்டமாக விமர்சனம் செய்துள்ளார்.

மிகப்பெரிய ஊழல் முறைகேடு

தனது  வீட்டில் நடந்த தாக்குதல் சம்பவத்திற்கு எதிராக கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் கொடுக்க யூடியூபர் சவுக்கு சங்கர் கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்திற்கு வருகை தந்திருந்தார். காவல் நிலையத்தில் புகாரை கொடுத்த பின் செய்தியாளர்களை சந்தித்த யூடியூபர் சவுக்கு சங்கர், “சவுக்கு மீடியா ஊடகத்தில் தொடர்ந்து சில ஆண்டுகளாக தமிழக அரசில் நடைபெற்று வரும் ஊழல்களையும் நிர்வாக சீர்கேடுகளையும் பதிவு செய்து வருகிறோம். துப்புரவு தொழிலாளர்களுக்கு கழிவுநீர் வெளியேற்றும் வாகனம் வழங்குவதில் மிகப்பெரிய ஊழல் முறைகேடு நடந்துள்ளது.

Read more: ஒரு காமெடியால் வந்த வினை.. குணால் கம்ராவை ரவுண்டு கட்டும் சிவசேனா தொண்டர்கள்

துப்புரவு தொழிலாளர்களுக்கு வாகனம் வழங்கும் திட்டம் தமிழக அரசே செயல்படித்திருக்க முடியும், ஆனால் அதை தனியார் நிறுவனத்திடம் ஒப்படைத்தார்கள். இந்த திட்டத்தின் மூலம் காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை 150 கோடி லாபமடைந்துள்ளார். இந்த திட்டத்தில் பயனடைந்தவர்களில் 130 பேர் காங்கிரஸ் கமிட்டியை சேர்ந்தவர்கள். மத்திய,  மாநில அரசு சுத்திகரிப்பு தொழிலாளர்களுக்கு வழங்கும் மானியத்தில் செல்வப்பெருந்தகை கொள்ளையடித்துள்ளார் என எனது பக்கத்தில் பதிவு செய்திருந்தேன்.

என் உயிருக்கு ஆபத்தை ஏற்பட்டிருக்கும்

காவல்துறை நினைத்திருந்தால் என் வீட்டின் மீது நடந்த தாக்குதலை தடுத்திருக்க முடியும். காங்கிரஸ் கமிட்டியை சேர்ந்த வழக்கறிஞர் 50க்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்களை ஊர்வலமாக அழைத்து வந்து என் வீட்டில் தாக்குதல் சம்பவம் நடத்துகிறார். ஆனால்  எதுவும் தெரியாமல் உளவுத்துறை இருக்கிறதா? தாக்குதல் நடந்ததால் கீழ்பாக்கம் வீட்டின் உரிமையாளர் என்னை வீட்டை காலி செய்யும்படி கூறுகிறார்.

தாக்குதல் நடந்த போது நான் வீட்டில் இருந்து இருந்தால் என் உயிருக்கு ஆபத்தை ஏற்பட்டிருக்கும். காவல் நிலையத்தில் எனது தாயார் புகார்  கொடுத்துள்ளார். மலம் கலந்த  கழிவுகளை சமையலறை குளியலறை படுக்கையறை, வளாகம் என எல்லா இடங்களிலும் கொட்டியுள்ளார்கள். வாணிஸ்ரீ விஜயகுமார் என்ற காங்கிரஸ் கமிட்டியை சேர்ந்த வழக்கறிஞரின் தூண்டுதலில் தான் அவர்கள் வந்துள்ளார்கள். வந்தவர்கள் தூய்மை பணியாளர்களா என்ற சந்தேகம் எனக்கு உள்ளது. வந்தவர்கள் தூய்மை பணியாளர்களாக இருந்திருந்தால் எனது வீடியோவை பார்த்துவிட்டு சந்தோசம் தான் அடைந்திருப்பார்கள்.

தமிழக அரசின் மீது ஊற்றப்பட்டது

இந்த வழக்கில் காவல்துறை விசாரணைக்கு அழைத்தால் தான் நிச்சயமாக ஒத்துழைப்பு கொடுப்பேன். எனக்கு ஆதரவாக அறிக்கை கொடுத்த அனைத்து தலைவர்களுக்கும் நன்றி தெரிவிக்கிறேன். எனது எதிர்கால நடவடிக்கை குறித்து இரண்டு நாட்களில் அறிக்கையாக பதிவு செய்ய உள்ளேன். இந்த சம்பவத்தில் எனது தாயார் மிகவும் வருத்தப்பட்டார். பின் வாசல் கதவில் எனது தாயார் இருந்திருந்தார் என்றால் நிச்சயம் அவர் உயிரிழந்திருப்பார். 

Read more: கொடை ரெடியா இருக்கா? தமிழகத்தில் மாறப்போகும் வானிலை

என் வீட்டில் நடந்த தாக்குதலின் பின்புலத்தில் காவல்துறை உள்ளதாக நான் சந்தேகம் கொள்கிறேன். நான்காண்டு காலமாக திமுக ஆட்சி எப்படி நடக்கிறது என்று கூறினேனோ அதற்கு என் வீட்டில் நடந்த சம்பவம் உண்மை என்பதை பிரதிபலிக்கும் விதமாக அமைந்துள்ளது.  இன்று என் வீட்டில் ஊற்றிய மலம் என் வீட்டில் ஊற்றப்பட்ட மலம் அல்ல.. தமிழக அரசின் மீதும், தமிழக அரசின் சட்டம் ஒழுங்கின் மீதும் ஊற்றப்பட்ட மலம். தமிழக அரசு ஆட்சி நடத்தும் லட்சணத்தின் மீது ஊற்றப்பட்ட மலம்” என தெரிவித்தார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow