ஒரு காமெடியால் வந்த வினை.. குணால் கம்ராவை ரவுண்டு கட்டும் சிவசேனா தொண்டர்கள்

மகாராஷ்டிரா துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே குறித்த குணால் கம்ராவின் கருத்து சிவசேனா ஆதரவாளர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

Mar 24, 2025 - 13:40
Mar 24, 2025 - 14:13
 0
ஒரு காமெடியால் வந்த வினை.. குணால் கம்ராவை ரவுண்டு கட்டும் சிவசேனா தொண்டர்கள்
குணால் கம்ரா-ஏக்நாத் ஷிண்டே

பிரபல ஸ்டாண்ட் அப் காமெடியனான (Standup comedian) குணால் கம்ரா சமீபத்தில் மும்பையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டுள்ளார். அப்போது, அவர் மகாராஷ்டிரா துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவை ‘துரோகி’ என்று குறிப்பிட்டதாக கூறப்படுகிறது.

இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளப் பக்கத்தில் வைரலான நிலையில் இது  ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான  சிவசேனா தொண்டர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. குணால் கம்ரா செயலால் ஆத்திரமடைந்த சிவசேனா தொண்டர்கள் மும்பையில் நிகழ்ச்சி நடந்த இடத்தின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.  

மேலும், நிகழ்ச்சி படமாக்கப்பட்ட ஹோட்டல் மற்றும் ஸ்டுடியோவை சூறையாடியதுடன் அங்கிருந்த நாற்காலிகள், கேமராக்கள் ஆகியவற்றை அடித்து நொறுக்கி சேதப்படுத்தினர். இதைத்தொடர்ந்து, குணால் கம்ரா மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சிவசேனா தொண்டர்கள் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளனர்.

மகாராஷ்டிரா முதல்வர் கண்டனம்

நகைச்சுவை கலைஞர் குணால் கம்ராவின் கருத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், “சிவசேனா தலைவர் ஏக்நாத் ஷிண்டே குறித்த கருத்திற்கு குணால் கம்ரா மன்னிப்பு கேட்டாக வேண்டும். துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே குறித்த இதுமாதிரியான கீழ்தரமான காமெடிகள் சரியானது அல்ல” என்று கூறினார்.

மேலும், “2024 தேர்தலில் யார் துரோகி மற்றும் யார் துரோகி இல்லை என்று மகாராஷ்டிரா மக்கள் காட்டிவிட்டனர். பால் தாக்கரே மரபு யாருக்கு உள்ளது என்பதை மக்கள் முடிவு செய்துவிட்டனர்” என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

எதிர்க்கட்சிகள் ஆதரவு

ஆளும் கட்சியினர் குணால் கம்ராவின் கருத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தாலும், எதிர்கட்சியினர் பலர் அவருக்கு ஆதரவு அளித்து வருகின்றனர்.

அதாவது, சிவசேனா கட்சியின் உத்தவ் தாக்கரே பிரிவைச் சேர்ந்த எம்.பி. பிரியங்கா சதுர்வேதி, ”அன்புள்ள குணால், நீங்கள் மாநில மக்களின் உணர்வை பிரதிபலித்துள்ளீர்கள். உறுதியாக இருங்கள் எனது இறுதி மூச்சு உள்ளவரை உங்களுக்கு உறுதுணையாக இருப்பேன்” என்று தெரிவித்துள்ளார்.  இச்சம்பவம் தற்போது அம்மாநில அரசியல் வட்டாரத்தில் பேசுப்பொருளாகியுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow