தமிழகத்தில் கோடைக்காலம் தொடங்கியுள்ளதால் வெப்ப நிலை கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து வருகிறது. அதிகப்படியான வெப்பத்தால் மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவதாக கூறப்படுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் 1-2 செல்சியஸ் குறைந்தும் ஏனைய இடங்களில் பொதுவாக பெரிய மாற்றம் எதுமின்றி உள்ளது.
தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை அநேக இடங்களில் பொதுவாக இயல்பை ஒட்டி இருந்தது. ஓரிரு இடங்களில் இயல்பை விட 2-3 டிகிரி செல்சியஸ் அதிகமாகவும், ஓருசில இடங்களில் இயல்பை விட 1-3 செல்சியஸ் குறைவாகவும் இருந்தது. தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் 34–38 டிகிரி செல்சியஸ் மற்றும் தமிழக கடலோரப்பகுதிகள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 33–36 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது.
மழை நிலவரம்
மார்ச் 24: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாளை (மார்ச் 25) மற்றும் நாளை மறுநாள் (மார்ச் 26) மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். வரும் 27-ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு:
நாளை (மார்ச் 25) தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலையில் பொதுவாக பெரிய மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு. வரும் 27-ஆம் தேதி முதல் 29-ஆம் தேதி வரை தமிழகத்தில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை படிப்படியாக 2 - 3 டிகிரி செல்சியஸ் உயரக்கூடும்.
அதிகபட்ச வெப்ப அளவின் வேறுபாடு:
நாளை (மார்ச் 25) தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை பொதுவாக இயல்பை ஒட்டி இருக்கக்கூடும். வரும் 26-ஆம் தேதி முதல் 28-ஆம் தேதி வரை தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் இயல்பை விட 2- 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும். வரும் 27-ஆம் தேதி மற்றும் 28-ஆம் தேதிகளில் அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும், குறைந்தபட்ச வெப்பநிலை அநேக இடங்களில் இயல்பை விட 2-3 டிகிரி செல்சியஸ் அதிகமாகவும் இருக்கக்கூடிய நிலையில், தமிழகத்தில் ஒருசில பகுதிகளில் அசௌகரியம் ஏற்படலாம்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:
நாளை (மார்ச் 25) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 35-36 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.