சென்னையில் நாய் கடித்து வடமாநில முதியவர் உயிரிழப்பு – மாநகராட்சிக்கு பொதுமக்கள் கோரிக்கை
மேற்கு வங்கத்தில் உள்ள தொழிலாளியின் குடும்பத்தாருக்கு போலீசார் தகவல் தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னையில் தெரு நாய் கடித்து பத்து நாட்கள் கழித்து மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 61 வயதுடையவர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேற்குவங்க மாநிலம், பால்பூர் பகுதியைச் சேர்ந்த ஸ்வப்பன் மன்னா (61) என்பவர் தங்கள் மாநில தொழிலாளிகளோடு சென்னை வானகரம் தனியார் பள்ளி பின்புறம் தற்காலிக டெண்ட் அமைத்து தாரா கன்ஸ்ட்ரக்சன் கம்பெனியில் துப்பரவு தொழிலாளியாக வேலை செய்து வந்தார்.
10 நாட்களுக்கு முன்பாக இவர் தங்கி இருந்த பகுதிக்கு அருகே தெருநாய் ஒன்று இவரை கடித்ததாக கூறப்படுகிறது. அன்றே மருத்துவமனை சென்று தடுப்பூசி போட்டுக் கொண்டதாக தெரிகிறது. கடந்த 13ம் தேதி ஸ்வப்பன் மன்னாவால் மூச்சு விட இயலவில்லை என தனது உறவினருக்கு தகவல் தெரிவித்தார். உறவினர் வந்து பார்த்தபோது, சுயநினைவின்றி ஸ்வப்பன் மன்னா கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். வானகரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
போலீசார் உடனடியாக அவரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போது, அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இந்த நிலையில் மேற்கு வங்கத்தில் உள்ள அவரது குடும்பத்தாருக்கு போலீசார் தகவல் தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடித்த நாய்யும் இறந்து விட்டது குறிப்பிடத்தக்கது.
What's Your Reaction?






