Sanath Jayasuriya : ஆல் ரவுண்டர் சனத் ஜெயசூர்யா அதிரடி பேட்டிங்கை மறக்க முடியுமா? - யார் இவர்?

Who is Sanath Jayasuriya : இலங்கை கிரிக்கெட் ஜாம்பவான், கிரிக்கெட் வரலாற்றின் மிகச்சிறந்த ஆல்ரவுண்டர்களில் ஒருவராக உலக கிரிக்கெட் ரசிகர்களால் கொண்டாடப்படுகிறார் சனத் ஜெயசூர்யா.

Aug 1, 2024 - 12:17
Aug 2, 2024 - 10:20
 0
Sanath Jayasuriya : ஆல் ரவுண்டர் சனத் ஜெயசூர்யா அதிரடி பேட்டிங்கை மறக்க முடியுமா? - யார் இவர்?
Who is Sanath Jayasuriya

Who is Sanath Jayasuriya : சனத் ஜெயசூர்யா என்ற பெயர் ஒன்று போதும்  உலகப் பந்து வீச்சாளர்களை நடுங்க வைப்பதற்கு! 1996-ல் ரணதுங்கா தலைமையிலான இலங்கை அணி, உலகக் கோப்பையை வென்றதற்கு ஜெயசூர்யாவின் அதிரடியான பேட்டிங்கும் ஒரு முக்கிய காரணம். 2000-ல் இந்தியாவுக்கு எதிராக 189 ரன்கள் குவித்த அவரது அட்டகாசமான இன்னிங்ஸை எப்படி மறக்க முடியும்?

இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரில் இலங்கை படுதோல்வி அடைந்ததை தொடர்ந்து, தற்போது இலங்கை அணியின் இடைக்கால பயிற்சியாளராக உள்ள ஜெயசூர்யாவின் பெயர் டிரெண்டிங் ஆகிவருகிறது. ஜெயசூர்யா யார் என்று தெரியாத பொடியர்கள் ஒருபுறம் அவரைக் கிண்டல் செய்து வருகின்றனர். இன்னொரு பக்கம், ஜெயசூர்யாவின்(Sanath Jayasuriya) பராக்கிரமங்களைப் பட்டியலிட்டு இன்னொரு தரப்பினர் அவருடைய புகழ்பாடி வருகின்றனர். உண்மையில் யார் இந்த ஜெயசூர்யா? 

இந்த இலங்கை கிரிக்கெட் ஜாம்பவான், கிரிக்கெட்  வரலாற்றின் மிகச்சிறந்த ஆல்ரவுண்டர்களில் ஒருவராக உலக கிரிக்கெட் ரசிகர்களால் கொண்டாடப்படுகிறார்


ஜூன் 30, 1969-ல், இலங்கையின் மாத்தறையில் பிறந்த ஜெயசூர்யா(Sanath Jayasuriya), மிக இளம் வயதிலேயே தனது கிரிக்கெட் பயணத்தைத் தொடங்கினார்.  1989 இல் சர்வதேச கிரிக்கெட்டுக்கு அறிமுகமான அவர், தனது ஆக்ரோசமான பேட்டிங் பாணியால் விரைவில் தனக்கென ஒரு இடத்தைப் பெற்றார்.


1990 களில் ஜெயசூர்யாவின் கிரிக்கெட் பயணம்  புதிய உச்சத்தை தொட்டது. விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரொமேஷ் கலுவிதாரணவுடன் சேர்ந்து ஒரு அதிரடியான ஓப்பனிங் பார்ட்னர்ஷிப்பை உருவாக்கி, தனது ஆக்ரோஷமான பேட்டிங்கால் பந்துவீச்சாளர்களை பயமுறுத்தினார். 1996-ல் ரணதுங்கா தலைமையிலான இலங்கை அணி, உலகக் கோப்பையை வென்றதற்கு ஜெயசூர்யாவின் அதிரடியான பேட்டிங்கும் ஒரு முக்கிய காரணம். 2000-ல் இந்தியாவுக்கு எதிராக 189 ரன்கள் குவித்த அவரது அட்டகாசமான இன்னிங்ஸை எப்படி மறக்க முடியும்?


ஆனால் ஜெயசூர்யாவை வெறுமனே ஒரு பேட்ஸ்மேன் என்று மட்டும் சுருக்கிவிட முடியாது. அவர் ஒரு திறமையான இடது கை சுழற்பந்து வீச்சாளர், ஒருநாள் போட்டிகளில் 323 விக்கெட்டுகளையும், டெஸ்டில் 98 விக்கெட்டுகளையும் எடுத்தார். பந்தை டர்ன் செய்வதோடு மட்டுமில்லாமல் வேகத்தை கூட்டிக் குறைத்து வீசும் திறமை அவரை பேட்ஸ்மேன்களின் சிம்ம சொப்பனமாக மாற்றியது.


1999 இல் இலங்கை அணியின் கேப்டனாக பொறுப்பேற்ற ஜெயசூர்யா(Sanath Jayasuriya) தலைமையில் இலங்கை அணி, பல்வேறு வெற்றிகளைக் குவித்தது. இலங்கை அணிக்குள் ஆக்ரோசத்தைப் புகுத்திய  அவர், பல்வேறு இளம் வீரர்களுக்கு ரோல் மாடலாக மாறினார். உலகின் விஸ்டன் முன்னணி கிரிக்கெட் வீரர் (1996), ICC ஆண்டின் சிறந்த வீரர் (2000) உள்ளிட்ட பல்வேறு விருதுகளை ஜெய்சூர்யா பெற்றுள்ளார்.


2011 இல் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, ஜெயசூர்யா வர்ணனையாளர், பயிற்சியாளர், மெண்டர் எனப் பல்வேறு பொறுப்புகளை ஏற்றுத் திறம்பட செயல்பட்டார். அவர் 2013 இல் ஐசிசி கிரிக்கெட் ஹால் ஆஃப் ஃபேமில் சேர்க்கப்பட்டார்.


கிரிக்கெட்டில் சனத் ஜெயசூர்யாவின் தாக்கம் அளவிட முடியாதது. ஓப்பனிங் பேட்டிங்கில் புரட்சியை ஏற்படுத்திய அவர்  ஒரு தலைமுறை கிரிக்கெட் வீரர்களை ஊக்கப்படுத்தினார். இன்றும் கூட குசால் பெராரா, அசலாங்கா என்று அவருடைய பாணியில் பேட்டிங் செய்யும் இலங்கை வீரர்களைப் பார்க்க முடியும்.  அச்சமற்ற அணுகுமுறையும்  நம்பமுடியாத திறமைகளும்  ஜெய்சூர்யாவை இலங்கை கிரிக்கெட்டின் அசைக்க முடியாத அடையாளம் ஆக்கியுள்ளது.


தினேஷ் அகிரா

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow