திண்டுக்கல்லில் விரைவு ரயிலில் ரூ.13 லட்சம் பறிமுதல்.. வருமான வரித்துறையினர் தீவிர விசாரணை
விரைவு ரயிலில் திண்டுக்கல்லில் நடந்த சோதனையில் ரூ.13 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. உரிய ஆவணம் இன்றி ரூ14 லட்சத்தை எடுத்துச் சென்ற நவநீதகிருஷ்ணன் என்பவரிடம் விசாரணை செய்து வருகின்றனர்.

நிஜாமுதீனில் இருந்து கன்னியாகுமரி நோக்கி சென்ற திருக்குறள் ரயிலில் முன்பதிவு இல்லாத பெட்டியில் ரயில்வே இருப்புப் பாதை காவல் துறையினர் நடத்திய சோதனையில் உரிய ஆவணம் இன்றி வெளிநாட்டு பண பரிவர்த்தனை செய்ய பணங்கள் மாற்ற எடுத்துச் சென்ற 13 லட்சத்து 77 ஆயிரத்து 900 ரூபாய் சிக்கியது. இதனைத்தொடர்ந்து, ஹவாலா பணமா என மதுரை வருமான வரித்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நிஜாமுதுனில் இருந்து கன்னியாகுமரி வரை செல்லும் திருக்குறள் எக்ஸ்பிரஸ் ரயிலானது மார்ச் 15 ஆம் தேதி காலை 8 மணிக்கு ஆக்ராவிலிருந்து புறப்பட்டு, சென்னை மார்க்கமாக திண்டுக்கல் ரயில் நிலையத்திற்கு 16.03.25 அன்று இரவு 10.42 மணிக்கு வந்தடைந்தது. அப்போது இந்த ரயிலில் பெட்டியில் உள்ள முன்பதிவு இல்லாத பயணிகள் செல்லும் பெட்டியினை ரயில்வே இருப்புப் பாதை காவல்துறையினர் சட்டத்திற்கு புறம்பான போதைப் பொருள்கள், தடை செய்யப்பட்ட பொருட்கள் ஏதேனும் கடத்தி வரப்பட்டுள்ளதா என்று சோதனை செய்தனர்.
அப்போது உரிய ஆவணம் இன்றி ரயிலில் பயணம் செய்த நபரிடம் சோதனை செய்ததில் 13 லட்சத்தி 77 ஆயிரத்து 900 ரூபாய் இருந்து உள்ளது. இதனை கண்ட இருப்புப் பாதை காவல்துறையினர் அந்த நபரை அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டதில் மார்த்தாண்டம் பகுதியை சேர்ந்த நவநீதகிருஷ்ணன் வயது 48 என்றும் கார் விற்பனை செய்து வருவதாகவும் அதற்காக இந்த பணத்தை எடுத்து செல்ல படுகிறது என்று முன்னுக்குப் பின் முரணாக பதில் கூறியதால் சந்தேகம் அடைந்த காவல்துறையினர் நவநீதகிருஷ்ணனையும் அவர் கொண்டு வந்த 13 லட்சத்தி 77 ஆயிரத்து 900 ரூபாயை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
வெளிநாட்டு பணங்களை மாற்றி கொடுக்கும் வேலையில் ஈடுபட்டுள்ளதாகவும் இவர், கொண்டு வந்த பணத்திற்கு எந்த விதமான ஆவணங்களும் உரிய பணப்பனிவர்த்தனை உரிமம் இல்லாமல் வெளிநாட்டு பணங்களை மாற்றியதாக கூறியதின் அடிப்படையில், ரயில்வே இருப்புப் பாதை காவல்துறையினர் மதுரையில் இருந்து வந்த வருமானவரித்துறையினரிடம் நவநீதகிருஷ்ணனையும், அவர் கொண்டு வந்த பணத்தையும் ஒப்படைத்தனர். மேலும் இவரிடம் உள்ள பணங்கள் ஹவாலா பணமா என்ற கோணத்தில் மதுரை வருமான வரித்துறையிரையை சேர்ந்த 5 அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
What's Your Reaction?






