மெரினாவில் களைக்கட்டும் உணவு திருவிழா.. மகிழ்ச்சியில் பொதுமக்கள்

மெரினா கடற்கரையில் நடைபெற்று வரும் உணவு திருவிழாவில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு உணவுகளை சுவைத்து மகிழ்ந்தனர்.

Dec 20, 2024 - 18:15
Dec 21, 2024 - 12:13
 0
மெரினாவில் களைக்கட்டும் உணவு திருவிழா.. மகிழ்ச்சியில் பொதுமக்கள்
மெரினாவில் நடைபெற்று வரும் உணவுத் திருவிழாவில் 35 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது

சென்னை மெரினா கடற்கரையில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் மகளிர் சுய உதவிக்குழுக்களை ஊக்குவிக்கவும், சத்தான ஆரோக்கியமான உணவுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் உணவுத் திருவிழாவை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

இந்த உணவுத் திருவிழாவில், தமிழ்நாட்டின் ஒவ்வொரு மாவட்டங்களிலும் சிறப்பு வாய்ந்த சுவையும், தரமும் நிறைந்த கோவை கொங்கு மட்டன் பிரியாணி, கிருஷ்ணகிரி நோ ஆயில் நோ பாயில், கரூர் தோல் ரொட்டி – மட்டன் கிரேவி, நாமக்கல் பள்ளிப்பாளையம் சிக்கன், தருமபுரி ரவா கஜூர், நீலகிரி ராகி களி – அவரை குழம்பு, திருப்பூர் முட்டை ஊத்தாப்பம், காஞ்சிபுரம் கோவில் இட்லி, சிவகங்கை மட்டன் உப்புக்கறி, புதுக்கோட்டை சுக்குமல்லி காபி, ராணிப்பேட்டை ஆற்காடு பிரியாணி, வேலூர் ராகி கொழுக்கட்டை.

மதுரை கறி தோசை, விருதுநகர் கரண்டி ஆம்லெட், தஞ்சாவூர் பருப்பு உருண்டை குழம்பு, திருச்சி நவதானிய புட்டு, மயிலாடுதுறை இறால் வடை, நாகப்பட்டினம் மசாலா பணியாரம், கன்னியாகுமரி பழம் பொறி, சென்னை தயிர் பூரி உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட உணவு வகைகளை, 65 சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த 150-க்கும் மேற்பட்ட மகளிர் உடனடியாக சமைத்து, சுகாதாரமான முறையில் பரிமாறும் வகையில் 35 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த சுய உதவிக் குழுக்கள் உற்பத்தி செய்த கைவினைப் பொருட்கள் உள்ளிட்ட 45 வகையான பொருட்கள் 3 அரங்குகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. இந்த உணவு திருவிழா இன்று முதல் வரும் 24-ஆம் தேதி வரை  மதியம் 12.30 மணி முதல் இரவு 08.30 மணி வரை நடைபெறும். உணவுத் திருவிழாவிற்கு வரும் பொதுமக்கள், லேடி வெலிங்டன் கல்லூரி, சென்னைப் பல்கலைக் கழகம் மற்றும் ராணி மேரி கல்லூரி ஆகிய கல்லூரிகளின் வளாகங்களில் இலவசமாக வாகனங்களை நிறுத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow