R-வாலெட் பயன்படுத்தி டிக்கெட் எடுத்தால் 3 சதவிகிதம் சலுகை.. ரயில்வே அறிவிப்பு
R-வாலெட் பயன்படுத்தி டிக்கெட் எடுக்கும்போது மூன்று சதவிகிதம் கேஷ்பேக் வழங்கப்படும் என்று ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
சென்னையில் மக்கள் தொகை அதிகமாக இருப்பதால் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக அரசு பேருந்துகள், மின்சார ரயில்கள், மெட்ரோ ரயில்கள் போன்ற வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும், சென்னையில் நூற்றில் 80 சதவிகிதம் பேர் பணியாளர்களாக இருப்பதால் அவர்களுக்கு இந்த போக்குவரத்து சேவைகள் பெரும் உதவியாக இருந்து வருகிறது.
இருந்தாலும், கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காகவும் விரைவில் உரிய இடத்தை அடைய வேண்டும் என்ற நோக்கில் பொதுமக்கள் தற்போது அதிகமாக மெட்ரோ ரயிலை பயன்படுத்தி வருகின்றனர். மெட்ரோ நிர்வாகமும் பயணிகளை கவரும் விதமாக பல சலுகைகளை அறிவித்து வருகிறது. ஆனாலும், மெட்ரோ ரயிலில் டிக்கெட் கட்டணம் கூடுதலாக இருப்பதால் பலர் மின்சார ரயிலை பயன்படுத்தி வருகின்றனர்.
அதாவது, மின்சார ரயிலில் டிக்கெட் கட்டணம் மிகவும் குறைவு. அதிலும் சீசன் டிக்கெட் (Season Ticket) எடுத்தால் கட்டணம் மேலும் குறைக்கப்படும். இதனால் பலர் மின்சார ரயிலை பயன்படுத்துகின்றனர் . தொலைத்தூர பயணிகள் பலருக்கு மின்சார ரயில் பயணம் சவுகரியமாக இருப்பதால் அவர்கள் பெரும்பாலும் மின்சார ரயில் சேவையை பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், பயணிகளை கவரும் விதமாக தெற்கு ரயில்வே நிர்வாகம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, "R-வாலெட் பயன்படுத்தி டிக்கெட் எடுக்கும்போது 3 சதவிகிதம் சலுகையை அறிவித்துள்ளது. ரயில்வே வாரியம் உத்தரவின்படி, இன்று (டிசம்பர் 20) முதல் ரயில் பயணிகள் R-வாலெட்டை பயன்படுத்தி UTS மொபைல் ஆப் அல்லது ATVM (Automatic Ticket Vending Machine) மூலம் UTS டிக்கெட் எடுக்கும்போது, டிக்கெட் கட்டணத்தில் மூன்று சதவிகிதம் கேஷ்பேக் வழங்கப்படும். இதற்கு முன்பு, R-வாலெட்டை ரீசார்ஜ் செய்யும்போது வழங்கப்பட்ட 3 சதவிகிதம் சலுகை, இப்போது டிக்கெட் எடுக்கும்போது வழங்கப்படுகிறது.
இந்த புதிய வசதி, அனைத்து வகையான முன்பதிவு இல்லாத டிக்கெட்டுகள், பிளாட்ஃபார்ம் டிக்கெட் மற்றும் சீசன் டிக்கெட்டுகளை UTS மொபைல் செயலியில் உள்ள R-வாலெட் அல்லது ATVM மூலம் வாங்கும் ரயில் பயணிகளை ஊக்குவிக்கும் விதமாக செயல்படுத்தப்பட்டுள்ளது. பயணிகள் நீண்ட வரிசையில் நின்று டிக்கெட் பெறுவதை தவிர்க்கும் விதமாக, UTS மொபைல் ஆப்பை பயன்படுத்தி எளிதில் டிக்கெட் பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுகொள்ளப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
What's Your Reaction?