பெண்ணை பின்தொடர்ந்தால் 5 ஆண்டு சிறை.. சட்ட திருத்த மசோதா நிறைவேற்றம்..!
தமிழ்நாட்டில் பெண்ணை பின்தொடர்ந்தால் 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், பிணையில் விடுவிக்காதபடி சட்ட திருத்த மசோதாவையும், தண்டனைகளை கடுமையாக்குவது தொடர்பான மசோதாவையும் சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்தார்.
தமிழக பெண்கள் துன்புறுத்தப்படுவதைத் தடுக்க சட்ட திருத்த மசோதாவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜன 10) சட்டப்பேரவை கூட்டத்தொரில் தாக்கல் செய்தார். தொடர்ந்து பேசிய அவர், சமூகத்தில் சரிபாதியான பெண் இனத்தின் மேன்மைக்கும், வளர்ச்சிக்கும் பல்வேறு திட்டங்களை உருவாக்கித் தரக்கூடிய அரசு திமுக அரசு. பெண்கள் அதிகம் வேலைக்கு செல்லும் மாநிலமாக , பெண்கள் அதிக சமூக பங்களிப்பு அளிக்கும் மாநிலமாக தமிழ்நாடு வளர்ந்து வருகிறது.
தமிழ்நாட்டில் பெண்ணை பின் தொடர்ந்தால் 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என்றும், பிணை விடுவிக்காதபடி சட்ட திருத்தம் கொண்டு வரப்படும் என தண்டனைகளை கடுமையாக்குவது தொடர்பான மசோதாவை சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்துள்ளார். 2025 குற்றவியல் திருத்த சட்ட முன்வடிவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் 2025 தமிழ்நாடு பெண்ணிற்கு துன்பம் விளைவித்தலை தடை செய்கின்ற திருத்தச் சட்டத்தை அறிமுகம் செய்தார். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்கு தண்டனையை அதிகரிக்கவும், ஜாமினில் வெளிவர முடியாத வகையில் சட்டங்களை கடுமையாக்கும் மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சட்டதிருத்த மசோதா:
பாலியல் வன்கொடுமைக்கு 14 ஆண்டுக்கு குறையாத கடுங்காவல் தண்டனை, காவல் துறை ஊழியர் மற்றும் அவரது நெறுங்கிய உறவினரால் பாலியல் வன்கொடுமை செய்தால் 20 ஆண்டுக்கு குறையாத கடுங்காவல் தண்டனை, 12 வயதுக்குட்பட்ட பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்யும் குற்றத்திற்கு ஆயுள் தண்டனை அல்லது மரண தண்டனை வழங்க சட்டத்திருத்த மசோதா கொண்டுவரப்பட்டுள்ளது.
மேலும், வன்கொடுமை மற்றும் மரணத்தை விளைவிக்கும் குற்றத்தை செய்யும் நபர்களுக்கு ஆயுள் தண்டனையும், கூட்டு பாலியல் வன்கொடுமை, 18 வயதுக்குட்பட்ட பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யும் குற்றத்திற்கு மரண தண்டனையும் , மீண்டும் மீண்டும் குற்றம் இழைக்கும் குற்றவாளிகளுக்கு மரண தண்டனையும் வழக்க சட்டத்திருந்த மசோதா கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டது.
What's Your Reaction?