‘யார் அந்த சார்’ vs 'இவன் தான் அந்த சார்’.. அதிமுக கேள்விக்கு பதிலளித்த திமுக உறுப்பினர்கள்

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் ‘யார் அந்த சார்’ என்ற அதிமுகவின் கேள்விக்கு ‘இவன் தான் அந்த சார்’ என்று திமுக உறுப்பினர்கள் பதிலளித்து போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.

Jan 10, 2025 - 12:24
Jan 10, 2025 - 12:24
 0
‘யார் அந்த சார்’ vs 'இவன் தான் அந்த சார்’.. அதிமுக கேள்விக்கு பதிலளித்த திமுக உறுப்பினர்கள்
அதிமுகவின் ‘யார் அந்த சார்’ கேள்விக்கு திமுக பதிலளித்துள்ளது

தமிழக சட்டப்பேரவை ஐந்தாம் நாள் கூட்டத்தொடர் இன்று நடைபெற்றது. இதில், அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் ‘யார் அந்த சார்’ என்ற வாசகம் பொருந்திய பேஜை அணிந்து வந்தனர். கடந்த மூன்று நாட்களாக கருப்பு சட்டை அணிந்து ‘யார் அந்த சார்’ என்ற வாசகம் பொருந்திய பேட்ஜ் அணிந்து வந்த நிலையில் இன்று கருப்பு சட்டையை தவிர்ந்து வெறும் பேட்ஜ் மட்டும் அணிந்து பேரவைக்கு வருகை தந்திருந்தனர். 

சட்டமன்றத்தில் கடந்த மூன்று நாட்களாக தொழில்நுட்ப கோளாறு காரணமாக  அதிமுகவினரை நேரலையில் காண்பிக்க  முடியாததாக தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில்  இன்று அதிமுக சட்டமன்ற உறுப்பினர் நேரலையில் காண்பிக்கப்பட்டனர். இந்நிலையில், 'யார் அந்த சார்’ என்று பேட்ஜ் அணிந்து வந்த அதிமுகவினருக்கு பதிலளிக்கும் வகையில் அண்ணாநகர் அதிமுக முன்னாள் வட்ட செயலாளர் சுதாகர் என்பவரை மேற்கோள் காட்டி 'இவன் தான் அந்த சார்' என்ற போஸ்டரை திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் வெளியிட்டனர். 

தொடர்ந்து, சட்டப்பேரவை வினாக்கள்- விடை நேரத்தில் வெளியே வந்த திமுக எம்.எல்.ஏ-க்கள் பரந்தாமன், தாயகம் கவி உள்ளிட்டோர் 'இவன் தான் அந்த சார்' என்று அதிமுகவின் முன்னாள் நிர்வாகி சுதாகரின் புகைப்படமும், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமியின் புகைப்படமும் அடங்கிய போஸ்டர்களை காட்டி முழக்கமிட்டனர்.

பின்னர், செய்தியாளர்களை சந்தித்த எழும்பூர்  சட்டமன்ற உறுப்பினர் பரந்தாமன் பேசியதாவது,  அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்த சம்பவத்திற்கு  புலன் விசாரணை நடந்து கொண்டிருக்கும்போது, விசாரணையில் சொல்லப்பட்ட வார்த்தையை வைத்துக்கொண்டு அதிகாரிகள் மற்றும் ஆட்சியாளர்களை குறிவைத்து பொதுவெளியில் பேசுவது சட்டத்திற்கு புறம்பானது.

'யார் அந்த சார்' என்ற பேட்ஜ் அணிந்து கொண்டும், கருப்பு சட்டை அணிந்து கொண்டும் அதிமுகவினர் சட்டப்பேரவைக்கு வந்து கொண்டிருந்தார்கள். அவர்களின் கேள்விக்கு அரசும், பிரதிநிதிகளும் பதில் சொல்ல வேண்டிய தேவை உள்ளது. அதனால் தான் பாவம் பார்த்து 'யார் அந்த சார்' என்ற கேள்விக்கு 'இவன் தான் அந்த சார்' என பதில் சொல்லி இருக்கிறோம் என்று கூறினார்.

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் ஞானசேகரனை தவிர்த்து மற்றொரு சார் தொடர்பில் இருப்பதாகவும் அவர் யார் என்பது தெரிய வேண்டும் என்றும் அதிமுக தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்தனர். சட்டபேரவை கூட்டத்தொடரிலும் இதுகுறித்து கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இந்நிலையில், அண்ணா நகரில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் கைது செய்யப்பட்ட அதிமுக பிரமுகர் சுதாகரை மேற்கோள் காட்டி ‘இவன் தான் அந்த சார்’ என்று திமுகவினர் பதிலளித்துள்ளனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow